பிரா அணிந்துகொண்டு தூங்கலாமா?
சிலர் தூங்கும்போதுகூட 24 மணி நேரமும் பிரா அணிந்துகொண்டிருப்பது சௌகரியமாக நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், சிலர் தூங்கும்போது பிரா அணிந்து தூங்க விரும்பமாட்டார்கள்.
பிரா அணிந்து கொண்டு தூங்துவது நல்லதா, கெட்டதா?
பிரா அணிந்துகொண்டு தூங்குவது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. பிரா அணிந்து கொண்டு தூங்குவது என்பது முற்றிலும் உங்கள் விருப்பம் சார்ந்தது. உங்களுடைய சௌகரியம் சார்ந்தது.
ஆனால், உங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருக்கிறது என்றால், மார்பகங்களில் வலி அல்லது பாலூட்டுகிறீர்கள் என்றால், மென்மையான, ஆதரவான பிரா அணிந்துகொண்டு தூங்குவது மிகவும் சௌகரியமாக இருக்கும்.
தூங்கும்போது பிரா அணிந்து கொண்டு தூங்க வேண்டுமா அல்லது பிரா இல்லாமல் தூங்கலாமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
நீங்கள் தூங்கும்போது பிரா அணிந்துகொண்டு தூங்க வேண்டுமா?
பெண்கள் இரவில் பிரா அணிந்துகொண்டு தூங்கலாமா என்றால் அது முற்றிலும் உங்களுடைய விருப்பம் மற்றும் சௌகரியம் சார்ந்ததுதான்.
ஆஸ்டின் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் லாரா டவுனிங் கூறுகையில், “தூங்கும்போது பிரா அணிந்துகொண்டு தூங்குவது ஆபத்தானது அதனால், கெடுதி என்றோ எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. அதே நேரத்தில், பிரா அணிந்துகொண்டு தூங்குவதால், குறிப்பிடத்தக்க வகையில் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை.” என்று கூறுகிறார்.
மார்பகங்களைப் பொறுத்தவரை எது சௌகரியமானதோ அதுதான் நல்லது. யூடியூப் மாமா டாக்டர் ஜோன்ஸ் என அழைக்கப்படும் பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் டேனியல் ஜோன்ஸ் கூறுகையில், “பெண்கள் இரவில் தூங்கும்போது பிரா அணிந்துகொண்டு தூங்குவது சரியா, தவறா என்றால், சரி - தவறு என்று எதுவுமில்லை - எது உங்களுக்கு சௌகரியமாக வசதியாக இருக்குமோ அப்படி செய்யலாம்” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், டாக்டர் ஜோன்ஸ் கூறும் சில கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
மார்பங்களின் அளவு அல்லது மென்மைத் தன்மையைப் பொறுத்து அது இருக்கும். நீங்கள் வசதியானவர் என்றால், மிகவும் மென்மையான பிராக்களை அணிவது உங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பாக உணரலாம். திரட்சியான இறுக்கமான மார்பகங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் மார்பக வலி உள்ளவர்கள அல்லது மென்மையான மார்பகங்கள் உள்ளவர்கள் மென்மையான பிராக்களை அணியலாம்.
பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பாக குழந்தை பிரசவித்த நாட்களில், பாலூட்டுவதற்கு வசதி உள்ள நர்சிங் பிரா அணிந்துகொண்டு தூங்க விரும்புகிறார்கள்.
சிலர் தளர்வான மார்பகம் காரணமாக, மார்பகத்தில் வலி உணர்ந்தால், அல்லது மார்பகக் காம்பில் அரிப்பு ஏற்படுமானால், மென்மையான பிரா அணிய விரும்பலாம்.
இரவில் பிரா அணிவது மார்பகம் தளர்வடைவதைத் தடுக்குமா?
இரவில் தூங்கும்போது பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் காலப்போக்கில் மார்பகங்கள் தளர்வடைந்து தொங்கவே செய்யும். இது தாய்மையின் இயல்பு.
ஒரு ஆய்வின் படி, மிகவும் குறிப்பிடத்தக்க மார்பக தொய்வுக்கான காரணிகளில் அவர்களின் வயது, உடல் எடை குறியீட்டெண் (பிஎம்ஐ), கர்ப்பங்களின் எண்ணிக்கை மற்றும் மார்பக திசு எடை ஆகியவையும் அடங்கியுள்ளன.
“பிரா அணிந்துகொண்டு தூங்கினால் மார்பகங்களின் தொய்வைத் தடுக்கும் என்பதற்கு நம்மிடம் எந்த ஆய்வும் இல்லை” என்று டாக்டர் லாரா டவுனிங் கூறுகிறார். “காலப்போக்கில் மார்பகங்கள் தொய்வடைதில் ஈர்ப்பு விசை முக்கிய பங்களிக்கிறது. எனவே, பிராவில் தூங்குவது பெரும்பாலான பெண்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
மார்பக திசு கூப்பரின் தசைநார்கள் எனப்படும் இணைப்பு திசுக்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்த கடினமான, கொலாஜன் நிறைந்த தசைநார்கள் தோலின் கீழ் அமைந்துள்ளன. உடலில் உள்ள மற்ற தசைநார்கள் போல காலப்போக்கில் நீட்டி வலுவிழந்து, மார்பகங்களை தொய்வு ஏற்படச் செய்கிறது.” என்று கூறுகிறார்.
மார்பக தொய்வு ஏற்படுவதற்கான பிற காரணிகள்:
மரபியல்
எடை ஏற்ற இறக்கங்கள்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள்
புகைபிடித்தல் (இது தோலில் எலாஸ்டின் அளவைக் குறைக்கிறது)
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் தொங்கும் என்று எல்லோரும் கூறுகிறார்கள் அல்லவா? உண்மையில் அப்படி எந்த ஆராய்ச்சியிலும் புத்தகத்திலும் இல்லை என்று டாக்டர் ஜோன்ஸ் கூறுகிறார்.
அதேபோல், 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தாய்ப்பால் கொடுப்பது, கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு மற்றும் வழக்கமான மேல்-உடல் உடற்பயிற்சியின்மை ஆகியவை மார்பகத் தொய்வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அதே நேரத்தில், இறுக்கமான, வலியை ஏற்படுத்தக்கூடிய பொருத்தம் இல்லாத பிரா அணிய வேண்டாம் என்று வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிரா அணிகிறீர்கள் என்றால் அதனால், நீங்கள் நன்றாகவும் சௌகரியமாகவும் உணர வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள், நன்றாகப் பொருந்தக் கூடிய பிரா அணிவது ஆரோக்கியமாக இருக்கும்.
சிலர் பிரா அணிந்து தூங்கினால் புற்றுநோய் வருமா என்று கேட்கிறார்கள். இந்த கட்டுக்கதையைத் தூக்கிப் பரணில் போடுங்கள். “பிரா அணிவது, பிரா அணிந்துகொண்டு தூங்குவது அல்லது பிராவில் உள்ள கம்பிகள் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையே நிச்சயமாக எந்த தொடர்பும் இல்லை” என்று டாக்டர் ஜோன்ஸ் கூறுகிறார். “இது ஒரு பரவலான தவறான கருத்து. இதில், நிச்சயமாக உண்மை இல்லை.” என்று டாக்டர் ஜோன்ஸ் கூறுகிறார்.
ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்துகொண்டு தூங்கலாமா?
ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்துகொண்டு தூங்கலாமா என்றால், தூங்கும்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உங்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கலாம். அதன் வளைவு கம்பியின் கடினத் தன்மை அசௌகரியத்தை ஏற்படுத்தும், இது நிச்சயமாக ஒரு திடமான இரவு நேரத் தேர்வாக இருக்கும்.
பிரா அணிந்துகொண்டு தூங்குவது என்று முடிவு செய்துவிட்டால், ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நல்ல வழி என்று பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்” என்று டாக்டர் டவுனிங் கூறுகிறார், “பிரா வசதியாக இருப்பதையும் மிகவும் இறுக்கமாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்ண்று கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.