மழைக் கால ஈரப்பதம்... மளிகைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க சூப்பர் டிரிக்ஸ்!

மழைக் காலங்களில் மளிகைப் பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மழைக் காலங்களில் மளிகைப் பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைக்கலாம் என்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
jar

மழைக்காலம் என்றாலே வீட்டில் சிறிது வேலைகள் அதிகமாக தான் இருக்கும். மழைக்காலத்தில் நம் வீடு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் இதனால் வீட்டில் இருக்கும் பல பொருட்கள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளது. அதிலும், மளிகைப் பொருட்கள் குளிர்ந்த காற்றுப்பட்டு கெட்டு போகும் நிலையும் ஏற்படும். இப்படி மழைக்காலத்தில் மளிகை பொருட்கள் சேதமடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Advertisment

சிம்பிள் டிப்ஸ்

1. மழைக்காலங்களில் காற்று புகாத உலர்ந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் அல்லது கொள்கலனில் மளிகைப் பொருட்களை சேமித்து வைப்பதோடு, புழுக்கள் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்க, வேப்பிலையை போட்டு வைக்க வேண்டும்.

2. பருப்பு , மாவு போன்ற பொருட்களை நல்ல வெயிலில் உலர்த்தி உயரமான இடத்தில் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாதபடி சேமித்து வைப்பது மிகவும் அவசியமாகும்.

3. மழைக்காலங்களில் ஈரப்பதத்தால் காய்கறிகள் மற்றும் கீரைகள் சீக்கிரம் அழுகிவிடும். இதனால் நமது தேவைக்கேற்ப அவ்வப்போது காய்கறிகளை வாங்கி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 

Advertisment
Advertisements

4. சமையலறை குப்பைகளை தினமும் அப்புறப்படுத்துவதோடு, சமையலறை அலமாரிகளை சுத்தப்படுத்தி ஈரப்பதம் இல்லாமல் வறண்ட நிலையில் பார்த்துக் கொள்வதால் மளிகைப் பொருட்களின் ஆயுள் நீட்டிக்கப்படும்.

5. கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகளில் மளிகைப் பொருட்களை சேமித்து வைப்பதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து காணப்படும்.

6. மழைக்காலங்களில் மசாலாப் பொருட்கள் கட்டிப்பிடிக்கும் அல்லது பூஞ்சைகள் பிடிக்கும் என்பதால் மசாலா பொருட்களை நன்கு வறுத்து கண்ணாடி கொள்கலன்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்து வைப்பது மசாலா பொருட்களை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கும்.

7. சர்க்கரை வைத்திருக்கும் அலமாரிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை வினிகர் மற்றும் தண்ணீரின் கலவையால் சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக செயல்படுத்தப்பட்ட கரி, பேக்கிங் சோடா மற்றும் வேப்ப இலைகளைப் போட்டு வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்ச உதவி செய்யும்.

8. மழைக்காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் அதிக சுமைகளை ஏற்றாமல் இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைப்பதோடு காய்கறிகளை வைக்கும்போது உலர வைத்து சேமிப்பது மிகவும் நல்லது.

9. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாயை உலர்ந்த கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைப்பதோடு, அதனை எடுக்கும்போது உலர்ந்த கரண்டிகளை பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் ஊறுகாய்களில் பூஞ்சைகள் பிடித்துவிடும்.

10. மழைக்காலங்களில் அரிசி, பருப்பு, தானியங்கள், மாவு, ரவை போன்ற மளிகைப் பொருட்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தேவைப்படும் அளவிற்கு வாங்கிப் பயன்படுத்துவதால் பராமரிக்கும் டென்ஷன் குறையும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: