ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையானவரா நீங்கள்? உங்களை எச்சரிக்கும் அதிர்ச்சி ஆராய்ச்சி

அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் உபயோகித்தால், மன அழுத்தம், கோபம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும் என ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் உபயோகித்தால், மன அழுத்தம், கோபம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும் என ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணையத்தளத்துடன் அதிக நேரம் செலவிடும் இளைஞர்களின் மூளையின் செயல்பாடுகளில் சமநிலையின்மை நிலவுவது தெரியவந்துள்ளது. இதற்காக, ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணையத்தளத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களின் மூளையின் செயல்பாடுகளை எம்.ஆர்.எஸ். எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ந்தனர்.

தினசரி வேலைகள், பொது வாழ்க்கை, தூக்கம், உணார்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள், ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களிடம் கேட்கப்பட்டது. இதில், அதிகளவில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, கோபம், திடீரென ஏற்படும் உணர்வுகளுக்கு ஆளாவது தெரியவந்தது.

×Close
×Close