/indian-express-tamil/media/media_files/2025/10/10/kannadi-viriyan-2025-10-10-19-56-43.jpg)
மிக விஷத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒன்று பாம்புகள். உலகில் 3000-க்கும் மேற்பட்ட பாம்புகள் வகைகள் உள்ள நிலையில் அவற்றில் 600 வகைகளுக்கு தான் விஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், சுமார் 200 பாம்பினங்களுக்கு மட்டுமே மனிதனை கொல்லும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையி, பாம்பு கடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”நல்ல பாம்பு ஜெண்டில் மேன் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களை கடிப்பதற்கு முன்பாக ஒரு வித்தியாசமான சத்தத்தை எழுப்பும். அதை தெரிந்து கொண்டு நாம் அதன் பாதையில் இருந்து நகர்ந்துவிட்டால் அவை நம்மை தீண்டுவதில்லை. இல்லையென்றால் அந்த வகையான பாம்புகள் நம்மை கடிக்கும் அபாயம் ஏற்படும்.
நல்ல பாம்பு படம் எடுக்கக் கூடிய தன்மைக் கொண்டவை. இதன் நிறம் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். நான்கு அடி முதல் ஆறு அடி வரை வளரக் கூடியது. இந்த பாம்பின் விஷத்தின் தன்மை தலைவலியை ஏற்படுத்தும் மற்றும் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். பொதுவாக நல்ல நம்பு கடித்தவர்கள் மருத்துவ சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டிருக்கீறார்கள்.
கண்ணாடி விரியன் பாம்பு வேட்டையாடும் தன்மை கொண்டவை. இந்த பாம்பு வயல்வெளிகளில் சுற்றித் திரியும். கண்ணாடி விரியன் கடித்தால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும். இந்த பாம்பை கண்டால் யானை கூட பயப்படும். கண்ணாடி விரியன் கடித்த இடத்தில் கடுமையான வலி இருக்கும். கடித்த இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறுமே தவிர உறையாது. இது ரத்தம் வழியாக பல நச்சுத் தன்மைகளை உடலுக்கு அனுப்பி பாதிப்பை ஏற்படுத்தும்.
சுருட்டை விரியன் பாம்பு ஒரு அடியில் இருந்து இரண்டடி தான் இருக்கும். கொடிய விஷம் கொண்ட இந்த பாம்பு நரம்பு மண்டலத்தை பாதித்து நமக்கு மூச்சுவிடும் தன்மை பாதிக்கும்.இது ரத்தத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. பாம்பு கடித்ததும் அந்த இடத்தில் வாய் வைத்து அந்த ரத்தத்தை உறிஞ்சு துப்புதல் என்பது சினிமாவில் வந்த பொய்யான சிகிச்சை முறை. இதை யாருமே செய்யாதீர்கள்.
நேரத்தை விரயம் செய்யாமல் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதன் மூலம் அவர்களை உடனடியாக காப்பாற்றலாம். பாம்பு கடித்த இடத்தில் துணிகளை வைத்து கட்டுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பாம்பு கடித்தவர்கள் பதட்டம் இல்லாமல் இருந்தால் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.