scorecardresearch

15 ஆண்டுகள் ஒன்றாக.. சினேகா காதலர் தின வாழ்த்துகள்

அவள் என்னவள், என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு மற்றும் மற்ற அனைத்தும். காதலர் தின வாழ்த்துக்கள்!

Sneha Prasanna
Sneha Prasanna

சினேகா- பிரசன்னா தமிழ் சினிமாவின் செலிபிரிட்டி தம்பதி. இருவரும் பல ஆண்டுகள் காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சினேகா, அதில் தன் குடும்பம், குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள், போட்டோஷூட்களை அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, சினேகா தனது இன்ஸ்டாகிராமில், ’15 ஆண்டுகள் ஒன்றாக இன்னும் நிறைய’.. என்று பிரசன்னாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதேபோல பிரசன்னாவும், சினேகா உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து “அவள் எனக்கான ஒருத்தி மட்டுமல்ல. அவள் என்னவள், என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு மற்றும் மற்ற அனைத்தும். காதலர் தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இங்கே பாருங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Sneha prasanna valentines day celebration