கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி: வைரலாகும் சோஹா அலிகானின் யோகா புகைப்படம்

தற்போது கரீனா கபூரின் கணவரான சைஃப் அலிகானின் தங்கையும், நடிகையுமான சோஹா அலிகானின் கர்ப்ப கால புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகைகள் என்றாலே ஒல்லியான உடலமைப்புக் கொண்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. திருமணம், கர்ப்ப காலம், குழந்தை பிறப்புக்குப் பிந்தைய புகைப்படங்களை பொதுவெளியில் பகிரவே தயங்குவார்கள். சமீபத்தில் நடிகை சரண்யா மோகன் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதைப்பார்த்த நெட்டிசன்கள், அவரை உடல் ரீதியாக விமர்சித்தனர்.

பாலிவுட்டில் இந்த நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்குப் பின் தங்கள் உடலமைப்பில் எவ்வித மாற்றம் ஏற்பட்டாலும் அந்த புகைப்படங்களை பகிர பெரும்பாலும் தயங்க மாட்டார்கள். சமீபத்தில் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம்ம வைரல். அதேபோல், தற்போது கரீனா கபூரின் கணவரான சைஃப் அலிகானின் தங்கையும், நடிகையுமான சோஹா அலிகானின் கர்ப்ப கால புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. யோகா செய்யும்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள், கர்ப்ப காலத்தில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close