எய்ட்ஸ் குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பதும், அதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் முக்கியம்.
எனவே, மக்கள் தங்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வதும் முக்கியம். மேலும், வெவ்வேறு பாலின பரவும் நோய்கள், அவை எவ்வாறு பரவுகின்றன? அவைகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக இதுபோன்ற நோய் பரவல்கள் இருந்து தப்பிக்க பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடிப்பது முக்கியம். அந்த வகையில், பாலியல் செயல்பாட்டின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவதும், பல்வேறு கருத்தடை முறைகள் மற்றும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உடலுறவு கொள்வதும் முக்கியம்.
இது குறித்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் ஒருவர் கூறுகையில், “பாலியல் நோய்கள் என்பது பாலியல் ஆசை, பாலியல் செயலிழப்பு மற்றும் பாலியல் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஆகும். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை ஆகும்” என்றார்.
பாலியல் நோய்களைத் தவிர்க்க உதவும் சில குறிப்புகள்
- ஒருவர் சில அறிகுறிகளைக் கொண்டிருந்தால் பாலியல் தொடர்பைத் தவிர்க்கவும்.
- பிறப்புறுப்பு, வாய்வழி அல்லது பின் பகுதி உடலுறவின் போது லேடெக்ஸ் அல்லது பாலியூரிதீன் ஆணுறை பயன்படுத்துவது தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும்.
- இருவரும் தடுப்பூசி போட வேண்டும், இது ஹெபடைடிஸ் பி மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
- துண்டுகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும், உடலுறவுக்கு முன்னும் பின்னும் கழுவவும்.
- பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளைப் பொறுத்தவரை, பாலியல் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பெண்கள் தங்கள் அந்தரங்கப் பகுதிகளை முன்பக்கத்திலிருந்து பின்பக்கம் வரை சுத்தம் செய்ய வேண்டும்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், உங்களுக்கு எச்.ஐ.வி இருந்தால், ஆல்கஹால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை இன்னும் அதிகமாக பாதிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil