/indian-express-tamil/media/media_files/2025/10/26/sore-throat-2025-10-26-16-25-18.jpg)
தொண்டையில் கீச் கீச்? உங்க கிச்சனில் இருக்கும் பொருள்கள்... இந்த அளவில் எடுத்துக்கோங்க!
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே, பலரும் 'தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு', 'எச்சில் விழுங்கவே கஷ்டமா இருக்கு' என்று புலம்பத் தொடங்கிவிடுவார்கள். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்தத் தொண்டை சார்ந்த பிரச்னைகள் நம் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கலாம். இந்தக் கரகரப்பான தொண்டை வலியிலிருந்து விரைவாக விடுபட, நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
தொண்டை வலி அல்லது எரிச்சல் தென்பட்ட முதல் நாளிலிருந்தே, கீழே உள்ள எளிய மருத்துவ முறைகளைப் பின்பற்றத் தொடங்கினால், பிரச்னையிலிருந்து எளிதாக விடுபடலாம்.
தொண்டை வலியை விரட்ட 5 எளிய வீட்டு வைத்தியங்கள்:
தொண்டையில் கிருமித் தொற்றுகளை நீக்குவதற்கு மிக அடிப்படையான மற்றும் பயனுள்ள வழி இதுதான். தினமும், மிதமான சூடுள்ள உப்புத் தண்ணீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வந்தால், தொண்டைப் பகுதியில் உள்ள எரிச்சல், வீக்கம் குறையும். இது சளியையும் இளக்க உதவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அருந்தவும். மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த கிருமிநாசினி (Antiseptic), மிளகு சளி மற்றும் இருமலுக்கு எதிரானது. இந்தச் சூடான பானம், தொண்டை வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசியைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவது தொண்டைக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் சில துளசி இலைகளைச் சேர்த்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வர, தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும்.
தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நன்மை பயக்கும் இரண்டு மூலிகைகளான கற்பூரவல்லி மற்றும் தூதுவளை இலைகளைச் சட்னி போல அரைத்துக்கொள்ளுங்கள். இதை இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால், சுவாசப் பாதை மற்றும் தொண்டை சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
தொண்டை பிரச்னைகள் குணமாகவும், புதிய பிரச்னைகள் வராமல் தடுக்கவும், குடிநீர்ப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாத நீரை முழுமையாகத் தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை, சூடான வெந்நீர் மட்டும் அருந்தும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும். குறிப்பாக, சாலையோரங்களில் அல்லது வெளி இடங்களில் விற்கப்படும் நீர் ஆகாரங்கள் அல்லது குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் இருந்தால், அவற்றைக் கைவிடுவது மிக நல்லது.
இந்த எளிய சித்த மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குளிர்காலத்தில் தொண்டை எரிச்சல் மற்றும் வலி இன்றி நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us