நிர்வாண புகைப்படங்களை வெளியிடும் ஒரு கிராமம் பற்றி நீங்கள் கேள்விபட்டது உண்டா?
Advertisment
ஸ்பெயினில் வெறும் 16 பேர் மட்டுமே வாழும் ஒரு கிராமம், நிர்வாண புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததன் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
Advertisment
Advertisements
இவர்கள் புகைப்படத்துக்காக அனைத்து உடைகளையும் துறந்து விட்டனர்.
60 வயதான பரங்கிக்காய் விவசாயி ஹூவாங்கோ ப்பெரெஸ், கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கொடுத்த போஸை மீண்டும் செய்து காட்டுகிறார்.
விவசாயி ஹூவாங்கோ ப்பெரெஸ்
இங்குள்ள பெரும்பாலான கிராமவாசிகளும் இப்படி நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்ட பிறகுதான் அவரும் இதில் பங்குபெற ஒப்புக் கொண்டார்.
நான் பங்குகொள்ள வேண்டியதாயிற்று… புகைப்படம் எடுக்க போதுமான ஆட்கள் இல்லை என்று சொன்னார்கள், இங்கு மிகக் குறைவாகவே மக்கள் வசிப்பதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்றார்.
இந்த கிராமத்தில் வெறும் 16 பேர் மட்டுமே வசிக்கின்றனர். தங்களது குக்கிராமம் மறைந்து போகாமல் இருக்க இவர்கள் இப்படி நிர்வாணமாக தங்கள் உடல்களை வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் தென்கிழக்கு ஸ்பெயினில் இந்த நிர்வாண படங்கள் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த புகைப்படங்கள் நாட்காட்டியில் அட்டைப்படங்களாக பயன்படுத்தப்படுகின்றன. மே மாதத்துக்கான அட்டைப்படம் அன்டோனியா ப்பெரியா உடையது.
இவர் பலர் நினைத்ததை போல அல்லாமல் இங்குள்ளவர்கள் மிகவும் தொலைநோக்கு பார்வை உடையவர்களாகவும், பரந்த சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பதை காட்ட வேண்டுமென விரும்புகிறார்.
அன்டோனியா ப்பெரியா அட்டைப்படம்
அன்டோனியா ப்பெரியா கூறுகையில், நாங்கள் மோசமாக சித்தரிக்கப்படுகிறோம், பெரிய சமூகங்களில் உள்ளவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்களோ அப்படித்தான், நாங்களும் பார்க்கப்பட வேண்டுமென விரும்புகிறோம், நாங்களும் வரி செலுத்துகிறோம், ஆனால் இங்கே எங்கள் சிறிய குக்கிராமத்தில் நாங்கள் தனித்து விடப்பட்டதாகவே உணர்கிறோம்… என்றார்.
இந்த நாட்காட்டி யோசனை, குடியிருப்பு சங்கத் தலைவியான லூசியா நிகோலஸ்- இடம் இருந்து வந்தது. 30 வயதே ஆன இவர், இந்த கிராமத்தின் இளங்குடியிருப்புவாசி. அவர் தனது அண்டை வீட்டாரின் தைரியத்தை பாராட்டுகிறார்.
லூசியா நிகோலஸ்
இது ஒரு வகையான விடுதலை மட்டுமல்ல, நாங்கள் பல முன்முடிவுகளையும் மாற்றி வருகிறோம், இது வழக்கமான நிர்வாண புகைப்படங்களை போல அல்லாமல், சாதரண மக்கள் தாங்களாகவே இயல்பாக இருப்பதை காட்டுகிறது.
நானும் கூட இதேபோல புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளேன். அந்த படமும் அற்புதமாக வந்தது, என்று லூசியா பெருமிதத்துடன் கூறுகிறார்.
இந்த கிராமத்தினர் ஏற்கெனவே அடுத்தாண்டு நாட்காட்டிக்கான திட்டங்களை தயாரித்து வருகின்றனர். இனிவரும் இந்த கிராமத்தில் இருந்து இன்னும் அதிகமான குடியிருப்புவாசிகள் நிர்வாண புகைப்படங்களை வெளிப்படுத்த போகிறார்கள்,
இந்த கிராமத்தை பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? எங்களுக்கு கமெண்டில் சொல்லுங்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil