Advertisment

எது தாம்பத்யம்? ஒரு சிறிய அலசல்!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து புதிதாய் தங்கள் இல்லறம் தொடங்கினர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எது தாம்பத்யம்? ஒரு சிறிய அலசல்!

லியோ

Advertisment

தற்காலத்தில் மிகவும் பேசப்படவேண்டிய தலைப்புகளில் ஒன்று எனினும், விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். இதோ விரிவாய் தெளிவாய் காண்போம் தாம்பத்யத்தை.

மணம் முடித்த தம்பதியரை அறைக்குள் தள்ளி, அந்த பூட்டிய அறைக்குள் கேட்கும் முனகல் சத்தமும், கட்டிலின் ஓசையுமே தாம்பத்யம் என்ற எண்ணமே இங்கு பரவலாக உள்ளது. நம் மக்களுக்கு கலவிக்கு தாம்பத்யத்திற்குமான வித்தியாசம் புலப்படவில்லை. இந்த இரண்டிற்குமான வித்தியாசம் ஒரு மெல்லிய கோடு மட்டுமே. அந்த மெல்லிய கோட்டை பற்றிய விரிவான கட்டுரையே இது.

நான் மேற்கூறியது போல கலவிக்கு தாம்பத்யத்திற்கு இடையிலான மெல்லிய கோட்டின் பெயரே புரிதல். ஆம், சரியான புரிதலோடு கொண்ட கலவியே முழுமையான தாம்பத்யம். புரிதல் என்னும் மந்திர சொல்லோ நம் வாழ்வில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்களை களைய வல்லது. புரிதலின்றி அரங்கேறும் எதுவும் முழுமையாய் முடிவதில்லை. இது மனிதனால் அனுபவிக்கப்படும் எல்லா உச்சக்கட்ட இன்பத்திற்கும் பொருந்தும், அதுவே தாம்பத்யத்திற்கும் பொருந்தும்.

இக்கால வாழ்கை முறையில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும், பணத்தை நோக்கி ஓடும் வேகத்தில் பல இன்பங்களை தொலைக்கிறோம். குடும்பத்தோடு பேசி பழக மறக்கிறோம், இங்கே புரிதலுக்கான நேரமும் பொய்யாகிறது என்பதே மெய்யாகிறது. இப்படி புரிதல் பொய்யாக துளிர்விடுகிறது சகிப்புத்தன்மையை. சரி சகிப்புத்தன்மை துளிர்விட்டால் நன்மைதானே, என்று நீங்கள் வினைவது சரியே.

தன் கருத்துக்கு மதிப்பு இல்லை என்றபோதும், ஒருவேளை நாம் தவறான கருத்தை தந்துவிடுவோமோ என்ற அச்சமும் நம்மை சகித்துக்கொள்ள சொல்கிறது. அதிலும் குறிப்பாக கணவன், மனைவி இடையிலான சகிப்பு அவர்களை நாளடைவில் மிருகமாக மாற்றுகிறது. தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் மனைவி, அடிக்கடி தொல்லைச்செய்யும் கணவன் என்று ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்து தவறான பாதையில் செல்ல ஆட்படுத்தப்படுகிறாள்கள்.

இதற்கு மாறாக சகிப்புத்தன்மையை விடுத்து தங்கள் மனதில் பட்டத்தை பகிர்ந்து, அந்த பகிர்தலின் மூலம் புரிதலை உண்டாகி தங்கள் தாம்பத்திய தேடலை அழகாய் பரிமாறி, இல்லறம் பூண்டு வெற்றி பெற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து புதிதாய் தங்கள் இல்லறம் தொடங்கினர். இல்லறம் பூண்ட முதல்நாளிலே தன்னால் முழுமையான இல்லறத்தில் ஈடுபடமுடியாத ஆவணத்தை அவள் அறிகிறாள், அவ்வண்ணமே அவனும் அறிகிறான். ஆனால், அந்த ஆண் அவளை ஒதுக்கவில்லை. மாறாக தன துணைவியின் குறைதீர்க்க பல மருத்துவரிடம் செல்கிறான். எதிலும் பயனற்று போகவே, தன் இன்னுயிர் மாய்துகொள்கிறாள் அந்த இளம் மனைவி.

அவள் இறப்புக்கு பின் அவள் இறுதியாய் எழுதிய கடிதம் கிடைக்கிறது, அதில் தன்னிடம் தான் குறையுள்ளது என்பதை அறிந்தும் நித்தமும் என்னை குழந்தை போல் பாதுகாத்த தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டுமென எழுதியிருந்தால் அந்த உத்தமி. இதை நான் சொல்ல காரணம், அந்த பெண் மாண்ட போதும், இறுதி வரை தன் மனைவியிடமே குறைத்திருந்தாலும் அவளை பிள்ளை போல் பாவித்த அந்த கணவனும் நல்ல புரில்தளோடு வாழ்ந்ததே ஆகும்.

இப்படி உள்ள உணர்வுகளை பகிர்ந்து, ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு தாம்பத்தியம் கொண்டு, வரும்கால சந்ததிக்கும் இதை எடுத்துச்சொல்லி நலமோடு வாழவேண்டுமென கட்டுரையை முடிக்கிறேன்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment