சன்னி லியோன் நடத்தும் ஸ்ப்லிட்ஸ்வில்லா : வைரல் ஹிட் ஷோ!

'ஸ்ப்லிட்ஸ்வில்லா' என்ற ஷோவை நீங்கள் பார்த்ததுண்டா!? இதில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளே விவகாரமாகத் தான் இருக்கிறது.

நாம் இப்போதுதான் பிக்பாசையே பார்க்கின்றோம். ஆனால் ‘ஸ்ப்லிட்ஸ்வில்லா’ என்ற ஷோவை நீங்கள் பார்த்ததுண்டா!? இதில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளே விவகாரமாகத் தான் இருக்கிறது. ஏனெனில், இந்த ஷோவை நடத்துவதே ‘சன்னி லியோன்’ தான். ரண்விஜய் சிங் மற்றும் சன்னி லியோன் இந்த ஷோவை தொகுத்து வழங்குகின்றனர். வட இந்திய டிவியொன்றில் சக்கை போடு போடுகிறது இந்த ஷோ.

இந்த ஷோவின் நோக்கம் என்ன தெரியுமா? இளம் ஆண்கள், பெண்கள் ஆகியோர் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு வித விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, இறுதியில், ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த துணையை கண்டறிய வைப்பது தான். இந்த நிகழ்ச்சியின் டேக்லைனே “கேட்ச் யுவர் மேட்ச்”.

முதல் டாஸ்க்கில் ஆண்கள் அணி இரு பிரிவாகவும், பெண்கள் அணி இரு பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது. ஆண்கள் அணி ஒன்றிலிருந்து ஒருவர் அழைக்கப்படுகிறார். அவர் தனது சட்டையை கழட்டிவிட்டு, கழுத்து முதல் வயிறு வரை வாசனைக்காக ஸ்ப்ரே அடித்துக் கொள்கிறார். அதன்பின், இரு பெண்கள் அணியில் இருந்து தலா ஒரு பெண் போட்டியாளர் அழைக்கப்படுகின்றனர்.

அந்த பெண்கள் 60 நொடிகளுக்கு அந்த ஆணின் கழுத்து முதல் வயிறு வரை முத்தம் கொடுக்க வேண்டும். 60 நொடியில் யார் அதிக முத்தம் தருகிறாரோ, அந்த பெண் போட்டியாளரின் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. லிப்ஸ்டிக்கை வைத்து முத்தங்கள் கணக்கிடப்படுகிறது.

இரண்டாவது டாஸ்க்கில், ஒரு பெண் இரண்டு ஆண்கள் என மொத்தம் மூன்று பேர் கொண்ட குழுக்கள் பிரிக்கப்படுகிறது. ஒரு குழுவைச் சேர்ந்த ஒரு ஆண் போட்டியாளரிடம் ஜூஸ் பிழியும் இயந்திரம் வழங்கப்படுகிறது. மற்றொரு ஆண், அந்த பெண்ணை தனது தோளில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 100 அடி தூரத்தில், ஒரு பாத்திரத்தில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளது.

விசில் அடிக்கப்பட்டவுடன், தோளில் தூக்கி வைத்திருக்கும் பெண்ணை தூக்கிக் கொண்டு வேகமாக அந்த பழத்தை நோக்கி ஓட வேண்டும். அந்த பெண் குனிந்து தனது வாயால் ஏதேனும் ஒரு பழத்தை கவ்வி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின், மறுமுனையில் ஜூஸ் பிழிய ரெடியாக நிற்பவரை நோக்கி ஓட வேண்டும். அருகில் சென்றுவுடன், பெண் போட்டியாளரின் வாயில் இருக்கும் பழத்தை தனது வாயால் அந்த ஜூஸ் பிழிபவர் வாங்கி, வாயாலேயே இயந்திரத்தில் போட்டு, பின்னர் ஜூஸ் பிழிய வேண்டும்.

எந்த குழு விரைவாக அனைத்துப் பழங்களையும் எடுத்து ஜூஸ் பிழிகிறதோ அந்த அணி வெற்றிப் பெறும் அணியாக அறிவிக்கப்படுகிறது.

ஜெண்டில்மேன் படத்தில் நம்ம செந்தில், ‘கப்ளிங்’ , ‘டிக்கிலோனா’ போன்ற விளையாட்டுகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதையே 2.o வெர்ஷனில் இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

×Close
×Close