பாகுபலி படம் மூலமாக உலக அளவில் பிரபலமடைந்தவர் இயக்குநர் ராஜமெளலி. இவரின் இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
Advertisment
அப்படத்திற்காக முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ராஜமெளலி தமிழ்நாட்டில் உள்ள பிரசித்த பெற்ற கோயில்களை சுற்றிப் பார்த்த வீடியோவை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
”தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் நீண்ட நாட்களாக சாலைப் பயணம் செய்ய விரும்பினேன். கோயில்களுக்குச் செல்ல விரும்பிய என் மகளுக்கு நன்றி, நாங்கள் அதில் இறங்கினோம். ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். கொடுக்கப்பட்ட சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடியும்.
நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.
மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தில் உள்ள காகா ஹோட்டல் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடை போட்டிருக்க வேண்டும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாய் மண்ணின் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.” என்று ராஜமெளலி அதில் பதிவிட்டுள்ளார்..
ராஜமவுலியின் இந்த வீடியோவுக்கு இப்போது லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரபலங்களுக்கு மத்தியில், ஹாலிவுட் வரைக்கும் புகழ்பெற்ற இயக்குனர் தமிழ்நாட்டில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“