ஒரு நல்ல புத்தகம், ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடும்.
Advertisment
நமக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு அளிப்பதற்கும், நம் பொழுதை நல்ல முறையில் கழிப்பதற்கும் புத்தகங்கள் உதவுகின்றன. வாசிப்பது ஓர் அற்புத அனுபவம், வாசிப்பு ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது. அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும். பல புதிய அரிய தகவல்களை அள்ளித்தரும்.
மனிதா்களுக்கு மன அழுத்தம் கூடியுள்ள இன்றைய காலகட்டத்தில், புத்தக வாசிப்பு அவா்கள் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தால், நம் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன், நினைவாற்றல் திறனும் அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்டு, கோவை மாநகர போலீசார், நகரின் பல்வேறு இடங்களில் தெரு நூலகங்கள் என்ற பெயரில் குறிப்பாக சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக கதை புத்தகங்கள் கொண்டு நூலகங்கள் அமைத்திருக்கின்றனர். அதை மிகச் சிறப்பாக பராமரித்தும் வருகின்றனர்.
இந்த தெருவோர நூலகங்களைப் பார்த்த 12 வயது சிறுமி அகர்ஷானா, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறைக்கு, 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஹைதரபாத்தில் படிக்கும் அகர்ஷானா விடுமுறைக்காக சொந்த ஊரான கோவைக்கு வந்தபோது, காவல்துறையின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த புத்தகங்களை வழங்கினார். இவர் ஏற்கெனவே, புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர்
கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் பெருமிதத்துடன் இந்த தகவலை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“