Advertisment

சோர்வுற்ற கை, கால்கள் ரிலாக்ஸ் ஆக கொஞ்சம் ஸ்ட்ரெச்சிங் பண்ணுங்க: மருத்துவ நிபுணர்கள் அறிவுரை

ஸ்ட்ரெச் செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வு, டென்ஷன் வெளியாகும் போது, உடலின் உள்ளார்ந்த பதிலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் குஷாலி லால்செட்டா வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
Stretching benefits

Stretching benefits

ஒரு நல்ல ஸ்ட்ரெச் உங்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை இலகுவாக உணர வைக்கிறது. நீங்கள் ஒரு பிஸியான நாளின் நடுவில் இருக்கும்போது கூட, உங்கள் சோர்வுற்ற கை, கால்களுக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் வகையில், ஒரு நல்ல ஸ்ட்ரெச் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Advertisment

எனவே, மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் சுசிதா ஏ முகர்ஜி, ஏன் ஒரு நல்ல ஸ்ட்ரெச் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார்…

ஸ்ட்ரெச் பொதுவாக நமக்கு நல்லது, ஏனெனில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, காயம் வராமல் தடுக்கிறது, மேலும் இது செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்!

ஸ்ட்ரெச் ஏன் மிகவும் நன்றாக இருக்கிறது, அதன் பிறகு நாம் ஏன் உற்சாகமாக உணர்கிறோம்?

இதற்கான பதில் எளிது. ஏனெனில் ஸ்ட்ரெச் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது மனநிலையை உயர்த்துகிறது, வலி மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது.

எண்டோர்பின்கள் வலியை ‘மறைத்து’ உங்களை நன்றாக உணர வைக்கும். அவை வலி சிக்னல்கள் (pain signals) பரவுவதைத் தடுக்கின்றன, மேலும் அவை பரவச உணர்வையும் ஏற்படுத்தக்கூடும், என்று முகர்ஜி கூறினார்.

Stretching exercises for beginners

ஸ்ட்ரெச் செய்வது தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இது வேலை செய்யுமா?

ஸ்ட்ரெச் செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வு, டென்ஷன் வெளியாகும் போது, உடலின் உள்ளார்ந்த பதிலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் குஷாலி லால்செட்டா வலியுறுத்தினார்.

டாக்டர் லால்செட்டாவின் கூற்றுப்படி, வழக்கமான ஸ்ட்ரெச், உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது.

ஸ்ட்ரெச் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தசை விறைப்பைக் குறைக்கிறது. இது உடலின் இயற்கையான ‘feel-good’ chemicals, எண்டோர்பின் வெளியீட்டையும் தூண்டுகிறது, இது தளர்வு மற்றும் நல்வாழ்வின் உணர்விற்கு பங்களிக்கிறது, என்று டாக்டர் லால்செட்டா கூறினார்.

நெக் ஸ்ட்ரெச், ஷோல்டர் ஸ்ட்ரெச், Hamstring stretch ஆகியவை நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், தசை அழுத்தத்தை குறைக்கவும் தினமும் செய்யலாம்.

இந்த ஸ்ட்ரெச்களை மெதுவாகவும் மென்மையாகவும், அதிகப்படியான சக்தி இல்லாமல் செய்வது முக்கியம் என்று டாக்டர் லால்செட்டா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment