விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். தனத்தை போல ஒரு மருமகள் வேண்டும் என்று நினைக்கும் மாமியார்களும், அவரை போல ஒரு அண்ணி, அக்கா வேண்டுமென நினைக்கும் இளம்பெண்களும் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.
Advertisment
இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா, ’கதை கேளு கதை கேளு’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் பகிர்ந்த பண்ணைத் தோட்டம் வீடியோ பலரையும் ஈர்த்தது.
மாங்காய் சீசன் வந்துருச்சு, அதனால மாங்கா வளர்ந்துருக்கும் நினைச்சு வந்தோம். இங்க ஒரு 4,5 மாமரம் இருக்கு. இந்த தோட்டத்துல கிளிமூக்கு, ரோமனியோ, பங்கனபள்ளி எல்லாம் இருக்கு. இந்த மாங்காய் எல்லாம் வீட்டுக்கு எடுத்துட்டு போக போறோம், எங்க வீட்டுல மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, இனி ஒரே மாங்கய்யா இருக்க போகுது.
Advertisment
Advertisements
நான் விஜயகாந்த் சார் வீட்டுக்கு எதிர்ல தங்கியிருக்கும் போது, பிரேமலதா மேடம் அவுங்க தோட்டத்துல இருந்து மாம்பழம் வரும் போது எங்களுக்கு கொடுப்பாங்க.
இதெல்லாம் ரசாயனம் இல்லாம, இயற்கையா மழைநீர்ல இருந்து வளருது, அதனால நம்ம சாப்பிடலாம், குழந்தைங்களுக்கும் பயமில்லாம கொடுக்கலாம் என்று சொன்ன சுஜிதா பிறகு வேறொரு தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு நெல்லி, மாங்காய், சப்போட்டா, பப்பாளி பறித்துக் கொண்டு காரில் மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“