sun tv nakshatra nagesh instagram nakshatra nagesh : `சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு, சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் லட்சுமி ஸ்டோர்ஸ் நக்ஷத்ராவையும் குறிப்பிடலாம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு சினிமா விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கினார். கூடவே நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர்,
நக்ஷத்ரா நாகேஷ் 1992 செப்டம்பர் 11 ஆம் தேதி நாகேஷ் மற்றும் நளினி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயின்ற அவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
View this post on Instagram
Blessed with the best ❤️ @nakhuln @nagesh0212 #birthday2020
A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh) on
இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வர, சன் டிவியின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் பணியிலிருந்து விலகி இருந்தார். ஆனால், அதற்குள் லாக்டவுன் அமலுக்கு வந்தது. இந்த வேளையில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூ-டியூப் சானல் ஆரம்பித்து பிசியாக இருந்து வருகின்றனர். நட்சத்திராவும் அதில் இருந்து தப்பவில்லை. மேக்கப், சேலஞ் என்று அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நட்சத்திரா, அண்மையில் சைன் லாங்குவேஜ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கார்.
புன்னகையான முகம், இயல்பான நடிப்பு, துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் என நக்ஷத்ராவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நிகழ்ச்சிகளில் ஸ்கர்ட் – டாப், சேலை ஆகிய உடைகளை விரும்பி அணியும் இவரின் டிரெஸ்ஸிங் சென்ஸையும் பாராட்டுகிறார்கள் ரசிகர்கள். தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடிக்கிறார் நக்ஷத்ரா. ’வணிகன்’ என்ற அந்தப் படத்தின் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடிக்கிறார். வி.பி.டேனியல் இந்த வணிகன் படத்தை இயக்குகிறார். சார்லி, புட் சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.
படபிடிப்பு இல்லாத நாட்களில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நக்ஷத்ராவுக்கு தென்னிந்திய உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Sun tv nakshatra nagesh instagram nakshatra nagesh family nakshathra nagesh youtube
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை