/tamil-ie/media/media_files/uploads/2022/11/Roja-1.jpg)
Priyanka Nalkari
சன் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
தினமும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார். தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள் மற்றும் வீடியோஸை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
ரோஜாவுக்கு பாவனா நல்காரி என்ற தங்கை உண்டு. அவருக்கு சமீபத்தில் குடும்பம், உறவினர்கள் சூழ வெகுவிமர்சையாக நடந்தது. அப்போது எடுத்த படங்களைத் ரோஜா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எனக்கு படிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஆனா, நான் ரொம்ப படிக்கல. உங்களுக்கு வாய்ப்பு இருந்தா, நல்ல படிங்க. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு என்ன புடிச்சுருக்கோ, அதை பண்ணுங்க. என் தங்கச்சி கிட்ட கூட அதுதான் சொல்லுவேன். அவ டிகிரி முடிச்ச பிறகுதான், நடிக்கலாமானு என்கிட்ட கேட்டா என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது ரோஜா தங்கை பாவனாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பாவனா நல்காரி திருமணம், ஹால்டி விழாவில் எடுத்த கியூட் போட்டோஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315608160_700498864506888_3709507840864163235_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315653448_1528935137622157_6768651489786828360_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315930697_205263098624764_9001444007893328618_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315968402_453128180088104_8745790303391183182_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315969857_470946931581368_5967551041941026747_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315987085_8408714122533367_5320262600777563799_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_316027183_510104017704238_5328141292112903387_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315442932_5620941717954469_2180412532058302830_n-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Snapinsta.app_1080_315876054_676998663825191_5212762370179847545_n-1.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us