சூரிய ஒளியை பயன்படுத்தி ஓவியம் வரைய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
Advertisment
மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்க்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத போது மனம் தளராமல் தன் ஓவியத் திறமையால் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது சூரிய ஒளி ஓவியங்கள் சமூக ஊடகங்களில் வரவேற்பை பெற்றுள்ளன. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் விக்னேஷின் திறமையை பாராட்டியுள்ளது.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
’சன் லைட் ஆர்ட், இது எப்படின்னா? மரப் பலகையில, என்ன ஆர்ட் வொர்க் பண்ண போறோமோ அதோட அவுட் லைன் பென்சில்ல வரைஞ்சிப்பேன். ஸ்மால், மீடியம், பிக்கர்- மூணு விதமான மெக்னிஃபையிங் கிளாஸ் யூஸ் பண்ணுவேன். ஒவ்வொண்ணும் ஃபோகஸ் பாயிண்ட் வேற மாதிரி இருக்கும்.
சூரிய ஒளியை சரியா மெக்னிஃபையிங் கிளாஸ்ல ஒரு டிஸ்டன்ஸ்ல வச்சு அந்த பாயிண்ட் அளவுக்கு ஃபோகஸ் பண்ணனும்.
இப்படி பண்ணும் போது சூரியனோட வெப்பத்தை முழுசா உள்வாங்கி நமக்கு எந்தெந்த ஏரியா வேணுமோ அங்கங்க எரிச்சிட்டே வருவோம். அந்த எரியுற இடம் தான் நமக்கு ஓவியமா மாறும், என்கிறார் சூரிய ஒளி ஓவியர் விக்னேஷ்..
இது ஆரம்பிக்கும் போது எனக்கு நிறைய தடைகள் இருந்தது. 2014ல அம்மா இறந்ததுக்கு அப்புறம் என்னோட சொந்த ஊரு மயிலாடுதுறைக்கு வந்துட்டேன். அங்க வேலைக்கு போகும்போது எனக்கு உடம்பு சரியில்லாம ஒருமாசம் பெட் ரெஸ்ட் எடுத்தேன்..
அந்த நேரம் எனக்கு நிறைய நெகட்டிவ் எண்ணங்கள் வர ஆரம்பிச்சது. அப்போதான் நான் இதை ஸ்டார்ட் பண்ணேன். அப்புறம் வேலைக்கு போகாம இதை முயற்சி பண்ணிட்டு இருந்தேன்.
நான் இந்தமாதிரி சூரிய ஒளில ஓவியம் வரையறது பாத்துட்டு என்னோட உறவினர்கள், இதை ரோட்ல போய் வரைஞ்சா உனக்கு பைசா போடுவாங்கனு தரக்குறைவா பேசுனாங்க.
அப்போதான் என்னோட ஆர்ட் வொர்க்க விக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. முதல்ல ஒரு என்.எஃப்.டி பிளாட்ஃபார்ம்ல மூவியோட சேர்ந்து விக்க ஆரம்பிச்சேன். அதுல ஏ4 சைஸ் கூட எனக்கு லட்சகணக்குல வித்துச்சு. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமா நிறைய ஆர்டர் வந்தது.
கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவுல என்னோட ஆர்ட் வொர்க் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்போதான் எனக்கு பொருளாதரா ரீதியா கொஞ்சம் முன்னேற்றம் வர ஆரம்பிச்சது, என்கிறார் விக்னேஷ்…..
முதல்ல விலை ரொம்ப அதிகமா இருந்தது. ஆனா அவரோட வொர்க் நான் நேரடியா பார்க்கும் போது ஒரு சிற்பி மாதிரி இருந்தது. இதை அவ்வளவு சீக்கிரம் பண்ண முடியாது. சூரியனும் ஒத்துழைக்கணும். இதை பார்க்கும் போதே ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
ஒரு கலையை இந்தளவுக்கு நுணுக்கமா பண்ண முடியுமான்னு எனக்குள்ள தோணுச்சு. அப்போதான் இந்த கலையோட மதிப்பு எனக்கு புரிஞ்சது, என்றார் வாடிக்கையாளர் அவினாஷ்…
எனக்கு இதுல வருமானம் குறைவாதான் வருது. ஆனா இதுக்கான வரவேற்பும் இருக்கு. நிறைய பேரு பாராட்டுறாங்க.. இது ஒரு புதுவிதமான கலை. உலகத்துலேயே 4,5 பேருதான் பண்றாங்க. அதுல ஆசியாவுல நான் மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன்.
இப்போதான் இந்த கலையை ஏத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆச்சரியமா பாக்குறாங்க… இதோட எதிர்காலம் சிறப்பா இருக்கும் நான் நம்புறேன், என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் சூரிய ஒளி ஓவியர் விக்னேஷ்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“