Advertisment

சன்ஸ்கிரீன் சரியாக பயன்படுத்துவது எப்படி? தோல் மருத்துவர் வீடியோ

தோல் மருத்துவர் சு, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கான சரியான முறையை பகிர்ந்து கொண்டார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
sunscreen

Correct way to apply sunscreen

தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisment

கோடைக்காலத்தில் வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் அணிவது பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இது வெயில், தோல் கருமையாகுதல் மற்றும் புற ஊதா கதிர்கள்(UV Rays) ஆகியவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆனால் குளிர்காலத்திலும் எப்போதும் சன்ஸ்கிரீன் அணிய வேண்டும்.

இது கவசமாக மட்டுமல்லாமல், சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பலர் இதைப் புரிந்துகொண்டு தங்கள் சன்ஸ்கிரீனுடன் கூட நட்பாக இருக்கிறார்கள்.

ஆனால், முகத்தில் லோஷனை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலும், மக்கள் இந்த லோஷனை, ஒரு சிட்டிகை எடுத்து தங்கள் முகத்தில் தடவுவார்கள்; சில சமயங்களில் காதுகளுக்குப் பின்பகுதி மற்றும் கழுத்தில் உள்ள தோல் போன்ற முக்கிய பகுதிகளை அவர்கள் தவிர்க்க நேரிடும்.

தோல் மருத்துவர் சு, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கான சரியான முறையை பகிர்ந்து கொண்டார்.

பெரும்பாலான மக்கள் தங்கள் விரல் நுனியில் சிறிது சன்ஸ்கிரீனை எடுத்து, பின்னர் அவற்றை முகத்தில் தேய்க்கிறார்கள். ஆனால், இது தவறான முறை.

அதற்குப் பதிலாக, நீங்கள் தாராளமாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, உங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களில் லோஷனை எடுத்து, ஃபேஸ் மாஸ்க் போல முகம் முழுவதும் சமமாகப் பூச வேண்டும். பிறகு, சன்ஸ்கிரீன் தோல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஊடுருவும் வரை நிதானமாக மசாஜ் செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment