20 வருட சின்னத்திரை பயணம்.. பெஸ்ட் வில்லி.. ரோஜா சீரியல் சந்திரகாந்தாவின் லைஃப் ட்ராவல்

suntv serial news: பாசிட்டிவ் நெகட்டிவ் எந்த ரோல் வந்தாலும் அதை பெஸ்டா கொடுக்கும் ராணிக்கு குலதெய்வம் ஆர்த்தி கேரக்டர் ரொம்ப பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

serial actress rani

சின்னத்திரையில் வில்லியாக, கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராணி. ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவரது தந்தை சினிமாவில் இருந்ததால், தனது சிறு வயதிலேயே 50க்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் ராணி. அதன் பிறகு படிப்பை முடித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். தமிழில் சிகரம் என்ற தொடர் மூலம் தான் அறிமுகமானார்.

அதன்பிறகு அலைகள் சீரியலில் கவிதா என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தது பெரிய ரீச் கொடுத்தது. அலைகள் ராணி என்று கூப்பிடும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் பதிந்து போனார். இதை தொடர்ந்து பல சீரியல்களில் வெவ்வேறு ரோல்களில் நடித்து வந்தார். சொர்க்கம் தொடரில் நெகட்வ் ரோலில் நடித்திருந்தது பயங்கர ஹிட் கொடுத்தது. அடுத்தது சரிகம நிறுவனத்தின் அத்திப்பூக்கள். இந்த தொடர் ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடியது. இதில் பெஸ்ட் வில்லியாக நடித்து பிரபலமானார் ராணி. பிறகு வள்ளி தொடரில் கமிட் ஆகி ‘டான்’ இந்திரசேனாவாக நடித்தார். அத்திப்பூக்கள் மற்றும் வள்ளி சீரியலில் நடித்ததற்காக பெஸ்ட் வில்லிக்கான சன் குடும்பம் விருதும் வாங்கியுள்ளார்.

பாசிட்டிவ் நெகட்டிவ் எந்த ரோல் வந்தாலும் அதை பெஸ்டா கொடுக்கும் ராணிக்கு குலதெய்வம் ஆர்த்தி கேரக்டர் ரொம்ப நல்லவளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கென ஒரு தனி ஸ்டைல் வைத்திருப்பார். மிரட்டி பேசுவது, இவரது கம்பீரமான தோற்றம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. முன் ஜென்மம், ரங்கா விலாஸ், சந்திரலேகா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சன்டிவியின் ரோஜா சீரியலில் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தாவாக நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகி கேரக்டரில் வில்லியாக கலக்கி வருகிறார்.

Serial Actress Rani 4
சீரியலில் ராணி

லேட்டஸ்ட் என்ட்ரி ஆக ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். அதிலும் வில்லி ரோல்தான். 20 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வரும் ராணிக்கு சினிமாவில் வில்லி ரோலில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial roja chandragandha serial actress rani biography

Next Story
ஏலக்காய், கிராம்பு, லெமன்… இப்படி செய்யுங்க; தொண்டை வலி- சளி பறந்து போகும்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com