சன்டிவியின் திருமகள் சீரியலில் கௌரி கேசவன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஜானகி தேவி. மதுரையை சேர்ந்தவர். சௌராஷ்ட்ரா கல்லூரியில் படித்தவர். ஜானகி சினிமாவில் என்ட்ரி ஆனதே சுவாரஸ்யமானது. ஜெய்-பூர்ணா நடிப்பில் அர்ஜூனின் காதலி என்ற படத்தின் ஷூட்டிங் சௌராஷ்ட்ரா கல்லூரியில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது படபிடிப்பை பார்க்க சென்றுள்ளார் ஜானகி. இவரை பார்த்து அசோசியேட் டைரக்டர் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை.

அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் படத்தில் டாப்ஸியின் தோழியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக மூன்று முறை ஆடிஷன் அட்டர்ன் பண்ணியுள்ளார். இந்த படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு கோரிப்பாளையம் படத்தில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது முத்துக்கு முத்தாக திரைப்படம் தான். அதில் விக்ராந்தின் மனைவியாக நடித்திருப்பார். நெகட்டிவ்வாக இருந்தாலும் இவரது கேரக்டர் நல்ல ரீச் ஆனது. பிறகு சசிகுமாரின் அத்தை மகளாக சுந்தர பாண்டியன் படத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜானகி தீவிர தளபதி விஜய் ஃபேன். இவருக்காகவே தேடி வந்தது காவலன் பட வாய்ப்பு. அந்த படத்தில் வடிவேலுவுடன் இவர் நடித்த பஸ் காமெடி வேற லெவலில் ஹிட் ஆனது. தொடர்ந்து பாக்கனும் போல இருக்கு, ஸ்கெட்ச், ரம்மி போன்ற படங்களில் நடித்து வந்தார். வெள்ளித்திரையில் பெரும்பாலான பட வாய்ப்புகள் இவரின் மதுரை தமிழ் பேச்சுக்காகவே கிடைத்தது. இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்களில் நடித்துள்ளார் ஜானகி. அதன்பிறகு ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். முதல் சீரியல் சன்டிவியின் வம்சம்தான். அதன்பிறகு ஜீ தமிழின் முள்ளும் மலரும், சத்யா, சன்டிவியில் ராசாத்தி போன்ற பல தொடர்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். தற்போது சன்டிவியின் திருமகள் தொடரில் கௌரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். ஹீரோயின் அம்மா கேரக்டர் கிடைத்தால் கூட நடிப்பாராம். ஆனால் நல்ல அழுத்தமான கதையாக இருக்க வேண்டும் என்கிறார் ஜானகி. மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்ட் வர ரெடியாக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil