விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் 9 இறுதிப் போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் 60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட்டது.
Advertisment
இதுவரை நடந்த சூப்பர் சிங்கரின் 8 சீசன்களிலும் ஆண்கள் மட்டுமே டைட்டிலை தட்டி சென்றிருக்கின்றனர். ஒன்பதாவது சீசனில் டைட்டிலை வென்றதன் மூலம் அருணா சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் அருணா பேசிய வீடியோ ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது. நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் பாடி முடித்த பிறகு பேசிய அருணா, கோவில்களில் எல்லாம் பாடப் போவேன். ஒருத்தர், இரண்டு பேர் உட்கார்ந்து கேட்பாங்க. என்ன தான் நாம பாடினாலும், பாடி முடித்ததும் எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி, நீங்க என்ன சாதி என்று என்னிடம் வந்து கேட்பாங்க. அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
அதை வெளியில சொன்னால், நம்மை பாட விட மாட்டார்களோ என்று ஒரு பயம் இருக்கும். அப்படி எல்லாம் தவிச்சு, சொல்லாமல், பயந்து பயந்து ஒளிந்து எல்லாம் வந்திருக்கோம். இப்போ எந்த பயமுமே கிடையாது. எந்த மூலையிலுமே போய் பாடுவேன் என்றார்.
இதனை கேட்ட நடுவர்கள், இசைக்கு சாதி, மதம் கிடையாது. என்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இன்று அருணா, 17 ஆண்டுகால சூப்பர் சிங்கரின் முதல் பெண் வெற்றியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்து உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“