சூப்பர் சிங்கர் ரசிகர்களின் தேடல் ஆதித்யா கிருஷ்ணன் பற்றி தான்! ஏன்?

மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை மீரா கிருஷ்ணனின் மகன்

super singer aditya mother vijay tv super singer
super singer aditya mother vijay tv super singer

super singer aditya mother vijay tv super singer : சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர் என மாறிமாறி நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இதில், ஏராளமானோர் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இந்த சீசனில் போட்டியாளராக பங்குபெற்று முதல் பாடலிலேயே மிகவும் நன்றாக பாடி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் ஆதித்யா கிருஷ்ணன். இவர் பாடுவது மட்டுமின்றி கிட்டார் வாசிக்கும் திறமை கொண்டவர்.

மேலும், அவர் கமலின் உனக்கென்ன மேலே நின்றாய் என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடி ஆல்பம் வெளியிட்டு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார்.

இதனிடையே இவர் யார் என ரசிகர்கள் கேட்க, இவர் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என தெரியவந்துள்ளது.அவர் பாடும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மேலும் அவர் சமீபத்தில் கவர் பாடல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அதை ரிலீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய கிருஷ்ணன் நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆதித்யா தனது அம்மா உடன் இருக்கும் சில போட்டோக்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவை தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super singer aditya mother vijay tv super singer aditya krishanan mother meer supersinger hotstar

Next Story
மீண்டும் வைரலாகும் ஹாசினி.. ஸ்ட்ராப்லெஸ் காக்டெய்ல் கவுனில் மிளிரும் ஜெனிலியா!Genelia Latest Viral Photoshoot Tamil News Bollywood Kollywood
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com