scorecardresearch

கொய்யாப் பழம், சீரகம்… தினமும் 2 வேளை இப்படி சாப்பிட்டா சுகர் போயே போச்சு!

Tamil Health News Update : பெரும்பாலும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக கொய்யா உடலுக்கு பல மருத்துவ நன்மைகளை கொடுக்கிறது.

Tamil Health Update : மாறி வரும் உணவு பழக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சர்க்கரை நோய் தாக்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உணவுக்கட்டுப்பாடு, சர்க்கரை நோய்க்கு மருத்துவம் என அதிம் செலவு செய்து வருகினறனர்.

எவ்வளவு தான் செலவு செய்தாலும், கடைசி வரை சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடும் நிலையில் தான் சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக இயற்கையில் பல மருத்துவ முறைகள் உள்ளன. இதனை பெரும்பாலும் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானாலும், குறைவானாலும், சர்க்கரை வியாதி தான். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம்.

இரத்த சர்க்கைரஅளவை கைட்டுக்குள் வைக்க பல இயற்கை மருத்துவ முறைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் கொய்யாப்பழம். பெரும்பாலும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக கொய்யாவை சீரகத்துளுடன் சேர்த்து சாப்பிடும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் அதிலும் குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் கொய்ய பெரும்பங்கு வகிக்கிறது.

எப்படி செய்வது ?

கொய்யா பழத்தை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு அதை தேங்காய் துருவலில் துருவி எடுத்தககொள்ளவும். அதன்பிறகு கொய்யா துருவலை ஒரு பாத்திரத்தில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சீரகத்தூள், மிளகுத்தூள் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கலந்து காலை மாலை என இரு வேளை பருகும் பல நன்மைகள் கிடைக்கிறது.

இந்த கலவையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண்களுக்கு நன்மை தரும். மேலும் மலச்சிக்கலுக்கு தீர்வு தரும். பற்களை உறுதியாக்கும்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இந்த திரவ பானம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tami health guava bedt medicine for diabetece in tamil update