தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் தனது நடனத்தாலும், நடிப்பாலும் பெயர் பெற்றவர் பழம்பெரும் நடிகை எல் விஜயலட்சுமி.
Advertisment
விஜி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எல் விஜயலட்சுமி, தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் போன்றவர்களுடனும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பவானி இவரது முதல் படம். சுமை தாங்கி, என் கடமை, ஆயிரத்தில் ஒருவன், பஞ்சவர்ணக் கிளி, காக்கும் கரங்கள், வல்லவன் ஒருவன், மகா கவி காளிதாஸ், ஊட்டி வரை உறவு” என அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை..
பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற ’ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள்.
Advertisment
Advertisements
1959 முதல் 1969 வரை 100 படங்களில் நடித்த விஜயலட்சுமி, தெலுங்கில் மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான என்டிஆருடன் மட்டும் 80 படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் சுரஜித் குமார் டி தத்தா என்னும் வேளாண்மை அறிவியலாளரைத் திருமணம் புரிந்து திரையுலகை விட்டு விலகினார்.
பிலிப்பைன்சிஸ் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்த விஜியின் சகோதரர், தன் வங்காள தோழரும், வேளாண்மை அறிவியலாளருமான சுரஜித் குமார் டி தத்தா விடம் தன் குடும்ப புகைப்படத்தை காண்பித்துள்ளார். அந்த புகைப்படத்தில் கவர்ந்திழுக்கும் புன்னகையுடன், கண்ணங்களில் அழகான குழியுடனும் இருந்த விஜியை பார்த்த உடனே சுரஜித்துக்கு பிடித்து விட்டது. சுரஜித் விஜியை நேரில் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார்.
S K De Datta explaining his research data on IR-8-288-3 to President Marcos in 1966
விஜியின் விருப்பத்தின்படி, சென்னை வந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்காக முழு ஒப்பனையுடன் டான்ஸ் மாஸ்டருக்காக அதிகாலை 3 மணி வரை காத்திருந்த விஜியை சுரஜித் சந்தித்தார்.
பலமணி நேரங்கள் அதே நிலையில் அமர்ந்திருந்த விஜியை பார்த்ததும், சுரஜித்துக்கு இந்த தொழில் மீது வெறுப்பும், கோபமும் ஏற்பட்டது. அதேநேரம் விஜியின் அசாத்திய பொறுமையை பார்த்து மிகுந்த மதிப்பும், இன்னும் அதிகமான காதலும் ஏற்பட்டு அங்கேயே விஜியின் தந்தை லட்சுமணனிடம் தன் விருப்பத்தை சொல்ல, அவரும் மகளை திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
1969ல் குடும்பத்தார் விருப்பத்துடன் இவர்கள் திருமணம் நடந்தது. அதன்பிறகு விஜயலட்சுமி அமெரிக்காவில் குடியேறினார்
விஜயலட்சுமி கணவர் சுரஜித் தே தத்தா வேளாண் அறிஞர் மட்டுமல்ல..
1960, 70 காலகட்டங்களில் இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் வந்தபோது, ஒரு ஹெக்டேருக்கு 5 டன் அரிசி உற்பத்தி செய்யும் வகையில் IR 8 என்ற நெல் ரகத்தை கண்டுபிடித்து அதில் நல்ல மகசூலையும் பெறமுடியும் என்பதை நிருபித்து பசுமை புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர்..
இது ஒருபுறமிக்க படிக்க வேண்டிய வயதில் நாட்டியத்தில் கவனம் செலுத்தி படிப்பை பாதியிலேயே நிறுத்திய விஜயலட்சுமி திருமணத்துக்கு பிறகு கணவரின் ஒத்துழைப்புடன் கல்வியில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.
தனித் தேர்வராக மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதினார். பிறகு படிப்படியாக அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறி சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வாளராக பணியாற்றினார்..
தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் விஜய லட்சுமி ஓய்வு நேரங்களில் அக்கவுண்டசி படிப்பை கற்றுத் தருகிறார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“