Advertisment

முகத்தில் விழுந்த எச்சிலை கூட மறைத்து… கண்ணதாசன்- ஜெயகாந்தன் நட்பு மகத்துவம்

கண்ணதாசனையும், ஜெயகாந்தனையும் எங்கள் தந்தை தலைவரின் ஆணையை நிறைவேற்றி, ஒரு கடமையை முழுமையாக செய்த மகிழ்ச்சியின் பரிசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kannadasan

கண்ணதாசன் - காமராஜர் - ஜெயகாந்த்ன்

த.இ.தாகூர்- கன்னியாகுமரி

Advertisment

1969-ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட காமராஜருக்கு ஆதரவாக கவியரசர் கண்ணதாசனும், சிறுகதை மன்னன் ஜெயகாந்தனும் பிரச்சாரம் பணிக்கு வந்த அந்த நாளில், காமராஜரை எதிர்த்து சுதந்திர கட்சியை சேர்ந்த டாக்டர்.மத்தியாஸ் தான் சார்ந்த அரசியல் கட்சியில் போட்டியிடாமல் சுயேச்சையாக "தரசு" சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் காமராஜரை ஆதரித்து தேர்தல் வேலை செய்ய வந்த, கவியரசரும், சிறுகதை மன்னன் ஜெயகாந்தனும், கன்னியாகுமரியில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான மெரிலான்ட் சுப்பிரமணியம் பிள்ளைக்கு சொந்தமான, பங்களாவில் தங்குவதாக முடிவானதும்.

அன்றைய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் பி.மகாதேவன்பிள்ளை, பழ.நெடுமாறன் ஆகியோருடன் கவியரசரும், ஜெயகாந்தனும் கன்னியாகுமரியில் தங்குவதால் அவர்களை கவனித்துக்கொள்ள தர்மநாதனிடம் சொல்லிவிடலாமா என காமராஜரே முடிவு செய்து கொண்டு மூவரிடமும் கேட்டுள்ளார்.

மூவரும் காமராஜரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்று மாலையே மூவரும் கன்னியாகுமரி சென்று தர்மநாதனிடம் காமராஜர் விருப்பத்தை கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்ட தர்மநாதன் மூன்று பேரிடமும் இது என் வாழ் நாள் பலன் என கூறியுள்ளார்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அன்றைய வார்ட் எண் 11 நான்கு முறை காங்கிரஸ் வார்ட் உறுப்பினராக வெற்றி பெற்ற (தற்போது அந்த வார்ட் எண் 18 மாற்றப்பட்டு,பெண்களுக்கான வார்டு ஆக மாற்ற பட்டுள்ளது) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான ஆனி தாமஸ் (தாமஸ்-ன் மனைவி) தர்மநாதனின் மகன் தாமஸ்-டம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக சந்தித்தோம். அவரிடம், கண்ணதாசனும், ஜெயகாந்தனும் குமரியில் தங்கியிருந்த அந்த நாட்களில் உங்கள் தந்தை புகழ் பெற்ற அந்த இரண்டு எழுத்தாளர்களுடன் உதவியாளராக இருந்த நாட்களில் இன்றும் மறக்க முடியாத நினைவுகள் குறித்து கேட்டோம்.

நமது கேள்விக்கு பதில் அளித்த அவர், கண்ணதாசனையும், ஜெயகாந்தனையும் எங்கள் தந்தை தலைவரின் ஆணையை நிறைவேற்றி, ஒரு கடமையை முழுமையாக செய்த மகிழ்ச்சியின் பரிசு. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள் தேர்தல் பணிக்கு வந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்பரமணியம், இ.வே.கி.சம்பத், கவியரசர், ஜெயகாந்தன், பழ.நெடுமாறன், குமரி அனந்தன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் பி. மகாதேவன் பிள்ளை, முகமது இஸ்மாயில் என தலைவர் காமராஜர் உட்பட எங்கள் தந்தையின் அழைப்பை ஏற்று எங்கள் இல்லத்தில் விருந்துண்டது.

கவியரசர் அவரது மகன்களான காந்தி, கமால், அண்ணாதுரை, கண்மணி சுப்பு, கலைவாணன், கவிஞரின் உதவியாளர் வசந்தன் என்பவரும் 40 நாட்கள் குமரியில் தங்கியிருந்தார்கள். கன்னியாகுமரி சற்று தொலைவில் உள்ள மகாதானபுரம் பகுதியில் ஒரு சின்ன கடல் போன்ற "நரிக்குளத்தில்" காலை நீராட கவிஞர், ஜெயகாந்தன், எனது தந்தை கவியரசரின் மகன்களுடன் நானும் சென்று நீராடி வருவது வாடிக்கை. கவியரசர் வாகனபயணத்தில் எப்போதும் முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பார்.

ஒரு நாள் நரிக்குளம் நோக்கி வாகனம் பயணித்துக்கொண்டிருந்தபோது பின் இருக்கையில் ஜெயகாந்தன்,என் தந்தை, நானும் உடன் இருந்தேன். வாகன பயணத்தின் போது கவியரசர் எச்சிலை வெளியே துப்பிய போது. காற்றின் காரணமாக எச்சில் பின் இருக்கையில் இருந்த ஜெயகாந்தன் முகத்தில் பட்டது. இதனால் சற்று அதிர்ச்சியடைந்த ஜெயகாந்தன் என் தந்தையிடம் சைகை மூலம் கவிஞருக்கு தெரிய வேண்டாம் என சொன்னார். கவிஞர் தொடர்ந்து பேசிய படியே வர வாகனம் குளத்தை அடைந்தது.

image-154

கவியரசர் எழுதிய கடிதம்

ஜெயகாந்தன் வேக, வேகமாக குளத்தில் இறங்கி முகத்தை கழுவினார். அதை பார்த்த கண்ணதாசன், ஜெயகாந்தனிடம் அப்போது கேட்ட கேள்வி. என்ன  ஜெயகாந்தன் உடல் குளியலுக்கு முன் ஏன் இந்த முக குளியல் என கேட்க ஜெயகாந்தன் வாகனப் பயணத்தின் போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை கேட்டு கவியரசர் மிகுந்த வருத்தத்தை அடைந்ததை உணர்த்தியது. அந்த நாளில் பல முறை ஜெயகாந்தனிடம் வருத்தம் தெரிவித்து இன்றும் பசுமையாக இருக்கிறது. காலை அரங்கம் நிகழ்வு, அரங்கு கூட்டம் நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் நடந்தால் அந்த நாட்களில் கவியரசரும், ஜெயகாந்தனும், என் தந்தையும் மதியம் ஓய்வு எடுக்கும் இடம்.

நாகர்கோவில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்தில் உள்ள கொன்றை மர நிழலில் துண்டை விரித்து ஓய்வு எடுப்பது வாடிக்கை. தெ.தி.இந்துக்கல்லூரி சூழல் கவிஞரை அதிகமாக ஈர்த்த நிலையில் அவரது தலைமகன் காந்தியை பிஏ., பட்டப்படிப்பில் தெ.தி.இந்து கல்லூரியில் சேர்ந்து பட்ட படிப்பு பயின்றார்.

இரண்டு பேரும் பொதுக்கூட்டம் முடித்து முன்னே, பின்னே தங்கும் இடம் வருவார்கள் ஒரு நாள் கவியரசர் மாலையே குமரி வந்து விட்டார். ஒருநாள் கவிஞருக்கு தொடர்ந்து விக்கல் வந்த்தால் சோர்வாக இருந்தார். தங்குமிடத்திற்கு வந்த ஜெயகாந்தன் கவிஞரின் நிலையை தெரிந்துகொண்டுள்ளார். அதன்பிறகு மார்த்தாண்டத்தில் கூட்டம் முடித்து கவிஞர் வாகனத்தில் ஏற வந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவன் " கத்தியோடு"என் அருகில் வர........ கவிஞர் என்னாச்சு எதுக்கு கத்தி என்று கேட்டுள்ளார். அடுத்த சில நொடிகளில் கவிஞருக்கு விக்கல் நின்று அமைதியடைந்தார்.

கவிஞரிடம் ஜெயகாந்தன் புன்னகையோடு சொன்ன வார்த்தைகள். அண்ணே விக்கலில் இருந்து நீங்கள் சுகம் அடையவே இந்த அதிர்ச்சி வைத்தியம் என சொன்னார். கவியரசர் இரவு தூங்க செல்லும் முன் நான் மருந்து சாப்பிட போகிறேன் என சொல்வார். அவர் விரும்பி அருந்தும் மதுவின் பெயர் எனக்கு தொரியாது ஆனால் சிங்கம் படம் ஒட்டியிருப்பதை பார்த்திருக்கிறேன்.

நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரம் போது ஞாயிறு கிழமை இரவு கவிஞர் நடிக்கும் "நாரதர் விஜயம் நாடகம் நடக்கும். அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தான் அறைகளின் ஒதுக்கி தங்கியிருந்தார்கள். கவியரசர் , ஜெயகாந்தன் எங்கள் தந்தையிடம் கொண்டிருந்த உயர்த்த நட்பின் அடையாளமாக இன்றும் நான் போற்றி பாதுகாத்து வருவது கவிஞர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தையும், சிறுகதை மன்னன் ஜெயகாந்தனும் அவர் எழுதிய "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்"என்ற தொடரில் என் தந்தை குறித்து எழுதியுள்ளார். இன்றும் காந்தி கண்ணதாசன்,அவரது சகோதரர்கள் அனைவரிடமும் எங்கள் இடையேயான நட்பு பாலம் ஒரு அடையாளம் என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment