/tamil-ie/media/media_files/uploads/2021/12/Curd.jpg)
Tamil Health Benefits Of Curd : விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி ஒருபுறம் மனிதன இனத்திற்கு சாதகாக அமைந்தாலும் மறுபுறம் சற்று பாதமாகவும் அமைகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தற்போது பெருகி வரும் கால நிலை மாற்றம் காணமாக ஏற்படும் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை பொருட்களை நாடிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் பெண்கள் சத்தாக ஆகரங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்
அந்த வகையில் எல்லா காலங்களிலும் எளிதாக கிடைக்கவும், பெண்களுக்கு அதிக நன்மைகள் தரக்ககூடிய பொருளாகவும் இருப்பதில் தயிருக்கு முக்கிய இடம் உண்டு. இயற்கை முறையில் தயரான தயிர் அதிக ஆரோக்கிய நன்மைகளை உள்ளடங்கியுள்ளது குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் இருந்து பெண்கள் தங்களை காத்து்ககொள்ள தயிர் இன்றியமையான ஆரோக்கிய உணவாக செயல்படுகிறது.
தயிர் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் :
எளிய முறையில் வீட்டிவேயே தயார் செய்யப்பபடும் தயிர் ஒரு மலிவான மருத்துவ பொருளாக செயல்படுகிறது. பெண்கள் தங்கள் உணவில் தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
தாய்பால் கொடுக்கும் பெண்களில் மார்பகங்களில் காணப்படும் லாக்டோஸ் நொதிக்கும் பாக்டீரியா தயிரில் அதிகம் உள்ளது. இது பெண்களுக்கு அதிகமாக பால் சுரக்கும் தண்மையை கொடுக்கிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள குறித்து மேற்கொண்ட ஆய்வில் தயிர் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள சுமார் 10 பில்லியன் பாக்டீரியால செல்களில், பெரும்பாலான செல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூற, சில பாக்ரியாக்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தம் மற்றும் நச்சுக்களை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.
மேலும் மார்பக குழாய்களின் அகலத்தை நிரப்புவதற்காக பிரிக்கும் ஸ்டேம் செல்கள் மைக்ரோஃப்ளோராவால் பரிக்கப்படுகிறது. மைக்ரோஃப்ளோராவின் சில கூறுகள் பெருங்குடல் மற்றும் வயிறு பகுதியில் உள்ள பிற உறுப்புகளை பாதிக்கின்றன. இந்த பாதிப்புகளை தயிர் ஒரு இன்றியமையாத மருத்துவ உணவாக செயல்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.