நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகளில் அதன் பாதிப்புகள் பரவி, அவர்களின் ரத்த நாளங்கள் பழுதடைந்து, அவை விரைவில் சிதைந்து விடுகிறது.
இதனால் நீரிழிவு பாதித்த 83% ஆண்களுக்கு விரைப்புத் தன்மையற்று, விந்தணுக்களில் குறைபாடு, விந்து முந்துதல், பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலுறவு குறித்த உணர்ச்சிகள் குறைந்து விடுவதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுவே பெண்களுக்கு நீரிழிவு தாக்கம் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் பிறப்புறுப்பு வழவழப்புத் தன்மை இழந்து வறட்சியுற்று, நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
தற்போது நடுத்தர வயதைத் அடைந்த ஆண் மற்றும் பெண்களுக்கு தான் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். நீரிழிவு நோயானது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களை தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கின்றது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் நிச்சயம் உண்டாகும் என்கின்றனர் சிறப்பு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
மேலும், ஆண்கள் புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன அழுத்தம், வேலைச்சுமை, அதிகமாக ஓய்வெடுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்களை நீரிழிவு நோய் அதிகமாக பாதிக்கிறது. சர்க்கரை அளவு குறித்து சித்த மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் எவ்வித சிக்கலுமின்றி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
சித்த மருத்துவம் குழு
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
நீரிழிவு நோய் ஒரு சித்த மருத்துவ ஆராய்ச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“