வீட்டு முன் கண் திருஷ்டி தோரணம்... இதுக்குப் பின்னாடி இப்படியொரு அறிவியல் உண்மையா!

ஒருவரின் முன்னேற்றித்தை பார்த்து புரளி பேசுவது, அவன் முன்னேற்றம் எப்போது சரியுமோ என்ற எதிர்பார்ப்பது தான் பொறாமை அல்லது கண்திருஷ்டி என்று சொல்வார்கள்.

ஒருவரின் முன்னேற்றித்தை பார்த்து புரளி பேசுவது, அவன் முன்னேற்றம் எப்போது சரியுமோ என்ற எதிர்பார்ப்பது தான் பொறாமை அல்லது கண்திருஷ்டி என்று சொல்வார்கள்.

author-image
D. Elayaraja
New Update
Iea Dis

பொதுவாக வீட்டின் வாசலில் கண் திருஷ்டிக்காக தோரணங்கள், மற்றும் எலுமிச்சை மிளகாய் சேர்ந்த கண் திருஷ்டி பொருட்கள் கட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழங்ககாலங்களில் நம் முன்னோர்கள் இதை ஆழமாக நம்பினார்கள். முன்னோர்கள் சொன்னது எல்லாமே அறிவியல் பூர்வமான உண்மை என்பது இப்போது நமக்கு தெரியவந்தாலும், சிலர் இந்த கண் திருஷ்டி என்பதை மூடநம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார்கள். 

Advertisment

ஒருவரின் முன்னேற்றித்தை பார்த்து புரளி பேசுவது, அவன் முன்னேற்றம் எப்போது சரியுமோ என்ற எதிர்பார்ப்பது தான் பொறாமை அல்லது கண்திருஷ்டி என்று சொல்வார்கள். இந்த நிலையை போக்குவதற்கும், இந்த எண்ணத்துடன் தனது வீட்டுக்கு வருபவர்களால் தங்கள் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும், எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது. அதே சமயம் தொழிலும் முடங்கிவிடாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதை குறித்து தான் இந்த கண் திருஷ்டி பொம்மை, அல்லது தோரணங்கள் கட்டப்படுகிறது.

இந்த கண் திருஷ்டியில் தோரணத்தில் இருக்கும், எலுமிச்சை, தனது வசீரகமான நிறத்தால், வீட்டுக்கு வருபவரின் கவனத்தை திசைதிருப்பி கண் திருஷ்டி ஆற்றலை ஈர்த்து உறிஞ்சும் சக்தியைக் கொண்டதாகவும், பச்சை மிளகாயில் உள்ள காரமும் உஷ்ணமும் எதிர்மறை சக்திகளை விலக்கி விரட்டும் பண்பைக் கொண்டது என்றும், அதில் கட்டியுள்ள கரி, கருமை நிறம், அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் தன்னில் தக்கவைத்து, வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் என்பது தான் நம்பிக்கை.

அதே சமயம் இதில் அறிவியல் நன்மைகளும் இருக்கிறது. எலுமிச்சையில் உள்ள லிமோனீன் கிருமிகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டது. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை சுத்தம் செய்து வீட்டுக்கு புத்துணர்வை கொடுக்கும். மிளகாயில் உள்ள கேப்சைசின் சில நுண்ணுயிரிகளை விலக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம், அல்லது அதன் காரமான மணம் பூச்சிகளை விலக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தோரணங்கள் விரைவில் வாடிவிடுவதன் மூலம், சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையின் மாற்றங்களை மறைமுகமாகக் குறிக்கலாம்.

Advertisment
Advertisements

வீட்டில், தோரணம் கட்டப்பட்டிருப்பதால், தீய சக்திகள் அல்லது திருஷ்டி இருக்காது என்று நினைக்கும் வீட்டின் உரிமையாளர், அதே நம்பிக்கையுடன் வேறு எங்கும் கவனம் செலுத்தமால் தனது மன அமைதி, நிம்மதி மற்றும் நேர்மறை எண்ணங்களை வைத்து, தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தி, வெற்றி அடையும்போது, தோரணம் தான் காரணம் என்று உறுதியாக நம்பத் தொடங்குகின்றனர். இப்படி தோரணம் கட்டுவதில் அறிவியல் கலந்த உளவியல் தாக்கங்களும் இருக்கின்றன. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: