தோல் பராமரிப்பு விஷயத்தில் கற்றாழை செடிக்கு நிகரானது எதுவுமில்லை. இதன் இலைகளில் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஜெல் உள்ளது. கற்றாழை ஜெல் முகப்பரு பிரச்சனைகளை கவனித்து, வீக்கத்தைக் குறைக்கும், மேலும் சருமத்தை ஊட்டமளித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
கற்றாழையில் ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலுவானவை. இது பாக்டீரியா பரவுவதைத் தடுக்கிறது. பாலிசாக்கரைடுகள் மற்றும் கிபெரெலின்கள் இதில் காணப்படுகின்றன.
கற்றாழை புதிய செல்கள் வளர்ச்சிக்கு உதவுவதோடு, வீக்கம் மற்றும் சிவப்பையும் குறைக்கின்றன. இது அதிகப்படியான சீபம், அழுக்கு மற்றும் நுண்ணுயிரிகளை வெளியேற்றுவதன் மூலம் துளைகளை சுருக்குகிறது.
கற்றாழை வெண்ணெய் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஷியா வெண்ணெய்யுடன் கற்றாழை ஜெல் சேர்த்தால், கற்றாழை வெண்ணெய் தயார், இது ஒரு சிறந்த தோல் பராமரிப்பு மூலப்பொருளாகும். இது உங்கள் சருமம் மற்றும் முடி இரண்டையும் அழகாக்குகிறது, முகத்தில் உள்ள கருவளையங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை குணப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
இது சில அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
கற்றாழை வெண்ணெயை, இயற்கை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும் – வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
கற்றாழை வெண்ணெய் எப்படி செய்வது?
சிறிது ஷியா வெண்ணெய், மூன்று தேக்கரண்டி கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து, பேஸ்ட் கன்சிஸ்டன்ஸி வரும் வரை தொடர்ந்து கலக்கவும். அதை ஒரு சிறிய ஜாடியில் வைக்கவும். இதை ஃபிரிட்ஜில் வைத்தால் குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு நீட்டிக்கும்.
அதன் ஆயுளை அதிகரிக்க, நீங்கள் அதில் கொஞ்சம் ரெடிமேட் கற்றாழை ஜெல்லையும் சேர்க்கலாம்.
பயன்கள்
இந்த ஹேர் மாஸ்கை, உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், அதை உச்சந்தலை முதல் இழைகள் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் விடவும்.
முகத்தை மென்மையாக்க மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தலாம். உங்கள் உதடுகளில் இந்த கற்றாழை வெண்ணெய் தடவ வறட்சி நீங்கி மிருதுவாகும். கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் இருக்க கண்களுக்குக் கீழே சிறிது அளவு தடவவும்.
நீங்கள் அதை தோலில் பயன்படுத்துவதற்கு முன், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“