ஃப்ரிட்ஜ் ஓடுறதுனால அதிக கரண்ட் பில் வருதா? இனி இத மட்டும் செய்யாதீங்க; அப்படியே குறைய சிம்பிள் டிரிக்ஸ்!

வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ் போன்ற சாதனங்களின் பயன்பாடு காரணமாக அதிகமாக மின் கட்டணம் வருவது பலருக்கும் சிரமமாக இருக்கலாம். இதனால் மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ் போன்ற சாதனங்களின் பயன்பாடு காரணமாக அதிகமாக மின் கட்டணம் வருவது பலருக்கும் சிரமமாக இருக்கலாம். இதனால் மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.

author-image
D. Elayaraja
New Update
fridge

இன்றைய காலக்கடடத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் அத்தியாவசிய பொருட்களில் பட்டியலில் ப்ரிட்ஜை வைத்துள்ளனர். ஆனால் இந்த ப்ரிட்ஜை வாங்குவது பெரிது அல்ல, அதை பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். இதனால் வீட்டில் கரண்ட் பில் கூட அதிகமாக வரும் வாய்ப்பும் இருக்கிறது.

Advertisment

வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ் போன்ற சாதனங்களின் பயன்பாடு காரணமாக அதிகமாக மின் கட்டணம் வருவது பலருக்கும் சிரமமாக இருக்கலாம். இதனால் மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் தேனீர் இடைவேளை யூடியூப் சேனலில் இது குறித்து பதிவிட்டுள்ளனர். ப்ரிட்ஜை திறக்கும்போது ஒருவிதமான கெட்ட வாடை வீசுவது சகஜம். இதைத் தடுக்கவும், பூஞ்சை ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஒரு எளிய டிப்ஸ் இருக்கிறது.

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் உப்பைப் போட்டு நன்கு கலக்கவும். பிறகு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். இந்தக் கரைசலை ஒரு துணியில் நனைத்து ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்கு துடைத்துச் சுத்தம் செய்யலாம். ப்ரிட்ஜ் கதவின் ஓரத்தில் ஒரு ரப்பர் பேண்டிங் இருக்கும். இது காற்றுப் புகாதபடி மூடுவதற்கு மிக முக்கியம்.இந்த ரப்பரில் ஏதாவது தேய்மானம் அல்லது சேதம் ஏற்பட்டால், ப்ரிட்ஜிற்குள் இருந்து கூலிங் வெளியேறி, அதிக மின்சாரம் செலவாகும். இந்த ரப்பரைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், மின்சார கட்டணம் அதிகமாவதைத் தவிர்க்க முடியாது.

அதைப்போலவே, ப்ரிட்ஜ் அணைக்காமல் இருக்கும்போது இந்த ரப்பர் போன்ற பகுதிகளில் ஏற்படும் தேய்மானம் காரணமாக ஷாக் அடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பலரது வீடுகளில், மருந்துகள் (மாத்திரைகள்), சில்லறைக் காசுகள், ஸ்நாக்ஸ்கள், வயர்கள், கூடைகள், காலண்டர்கள் எனப் பல வகையான பொருட்களை ப்ரிட்ஜுக்கு மேல் வைத்திருப்பார்கள். இது ஒரு பொதுவான தவறு. ப்ரிட்ஜ் இயங்கும்போது, அதிலுள்ள கம்ப்ரஸர் (Compressor) சரியாகச் செயல்பட வேண்டும். ப்ரிட்ஜுக்கு மேலே மற்றும் பின்னால் இருக்கும் பகுதிக்குச் சரியான காற்றோட்டம் மிகவும் அவசியம்.

Advertisment
Advertisements

ப்ரிட்ஜ் மீது பொருட்களை வைப்பது இந்த காற்றோட்டத்தைத் தடுத்து, கம்ப்ரஸர் அதிக நேரம் இயங்க வேண்டிய சூழலை உருவாக்கலாம். ப்ரிட்ஜின் முக்கிய பாகம் கம்ப்ரஸர். ப்ரிட்ஜுக்குள் இருக்கும் வெப்பத்தை (Heat) வெளியேற்றுவதே இதன் வேலை. ப்ரிட்ஜுக்குள் வெப்பம் இருக்கும் வரை கம்ப்ரஸர் ஓடிக்கொண்டே இருக்கும். கூலிங் ஆனவுடன் கம்ப்ரஸர் தானாகவே ஆஃப் ஆகிவிடும். நாம் ஃப்ரிட்ஜைத் திறந்து, உள்ளிருக்கும் பொருட்களை எடுக்கும்போது, வெளியிலிருக்கும் வெப்பம் உள்ளே செல்கிறது. மீண்டும் உள்ளே வெப்பம் கூடும்போது கம்ப்ரஸர் ஓடத் தொடங்கும். கம்ப்ரஸர் எவ்வளவு நேரம் ஓடுகிறதோ, அதைப் பொறுத்துதான் நம் வீட்டின் மின் கட்டணம் அதிகமாகும்.

ப்ரிட்ஜ் டோரை அதிக நேரம் திறந்து வைக்கக் கூடாது. ப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடக் கூடாது. ப்ரிட்ஜை அடிக்கடி ஆஃப் செய்துவிட்டு விட்டு, மீண்டும் ஆன் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், ஒவ்வொரு முறை ஆன் செய்யும்போது கம்ப்ரஸர் மீண்டும் புதிதாக ஓட ஆரம்பிக்கும். இதனால் மின்சாரம் அதிகமாக இழுத்து மின் கட்டணம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: