டிசைன் டிசைனாக தீபாவளிக்கு கோலம்... காலி பாட்டில் போதும்; விரல் வலிக்காமல் போட்டு அசத்துங்க!

நாளை பண்டிகை என்றால் இன்று இரவே தூங்காமல் வழித்துக்கொண்டு கோலம் போடும் பெண்களும் இருக்கிறார்கள்.

நாளை பண்டிகை என்றால் இன்று இரவே தூங்காமல் வழித்துக்கொண்டு கோலம் போடும் பெண்களும் இருக்கிறார்கள்.

author-image
D. Elayaraja
New Update
pacharisi maavu kolam

பொதுவாக வீடுகளில் காலை எழுந்தவுடன், வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். நகரத்தில் எப்படி இருந்தாலும் இன்றைளவும் கிராமங்களில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சயம் சாதாரன நாட்களில் சிறிய அளவில் இருக்கும் இந்த கோலம், பண்டிகை நாட்களில் பெரிய அளவில், வாசல் முழுக்க இருக்கும் அளவுக்கு போடுவார்கள். கோலம் போடுவது பெண்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.

Advertisment

கோலம் போடுவது பிடிக்கும் என்றாலும், பண்டிகை நாட்களில், பெரிய அளவில் போடும்பொது கண்டிப்பாக சிரமத்தை எதிர்கொள்வார்கள். இதனால் இவ்வளவு பெரிய கோலம் வேண்டுமா என்ற யோசனையும் இவர்களுக்கு வரும். அதேபோல், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கோலமாவில் படம் பலரைவது பலரின் விருப்பமாக இருக்கும். குறிப்பாக, சூரியன் பொங்கல் அன்று, சூரியன் வரைவது, மாட்டுப்பொங்கல் அன்று மாடு வரைவது, பொங்கல் வாழ்த்துக்கள் என்று எழுதுவது.

அதேபோல், தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது போல் வரைந்து தீபாவளி வாழ்த்துக்கள் என்று கோலத்தால் வாழ்த்து சொல்வது என பலரும் வித்தியாசகமாக யோசிப்பார்கள். இந்த டிசைனை கொண்டுவருவதற்காகவே பலமணி நேரம் செலவிடும் பெண்களும் இருக்கிறார்கள். மேலும் நாளை பண்டிகை என்றால் இன்று இரவே தூங்காமல் வழித்துக்கொண்டு கோலம் போடும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் வெகுநேரம் கோலம் போடுவதால், கடுமையாக சிரமம் மற்றும் கை வலி உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்.

இப்படி அவர்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காகவே இதில் ஒரு அருமையான டிப்ஸ் சொல்லப்போகிறோம். பொதுவாக கையால் கோலமாவை எடுத்து கோலம் வெகுநேரம் போடுவதால், கைவலி வரலாம். ஆனால் அதையே ஒரு காலி பாட்டிலில் அடைத்து கோலம் போடலாம் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ட்ரிக். ஒரு காலி வாட்டர் பாட்டிலை எடுத்து, அதன் மூடியில் நீளமாக ஒரு ஓட்டை போட வேண்டும் வெறும் ஆணியால் ஓட்டை போடும்போது ஓட்டை மட்டும் தான் விழும். ஆனால் நெருப்பில் ஆணியை வைத்து சூடாக்கி, அந்த சூட்டில் பிளாஸ்டிக்கில் ஓட்டை போடும்போது அந்த இடம் உருகி நீளமாக வரும்.

Advertisment
Advertisements

அதன்பிறகு, பாட்டிலில், கோலமாவை நிரப்பி, இந்த மூடியை வைத்து மூடி சைக்கிள் செயினுக்கு எண்ணை விடுவது மாதிரியான டைப்பில், தங்களுக்கு பிடித்தமான கோலத்தை எளிதாக வரையலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. 

Pongal Festival

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: