/indian-express-tamil/media/media_files/2025/10/13/download-43-2025-10-13-15-22-01.jpg)
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. இதை ஆழமாக சோதித்து பார்த்தால் இந்த கூற்று உண்மை தான். பொதுவாக பாம்புகள் மற்ற விலங்குகள் பறவைகள் போல் தங்கள் உணவை வேட்டையாட வெளியில் வருவது வழக்கம். அதே சமயம் மழைக்காலங்களில் தண்ணீரில் மிதந்து பாம்புகள் வீட்டுக்கே வருவது பலருக்கும அச்சத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் மனிதர்களை அதிகம் அச்சுறுத்துவது 4 பாம்புகள தான்.
கண்ணாடி விரியன்
பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக வேட்டையாடும் இந்த கண்ணாடி விரியன். எலிகளை அதிகம் வேட்டையாடும் என்பதால் பொதுவாக இந்த பாம்பு, வயல்வெளிகள் மற்றும் நெல் குடோன் போன்ற சமவெளிப் பகுதிகளில் அதிகம் காணப்படும். கடிப்பதற்கு முன் ஒலி எழுப்பும் இந்த பாம்பு கடித்தவிட்டால், உடனடியாக ரத்தம் உறைதலை தடுத்து, சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும்.
கட்டுவிரியன்
பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியில் வரும் கட்டுவிரியன் பாம்புகள், கடித்தால், கொசு அல்லது எறும்பு கடித்தது போல சிறிய வலியை மட்டுமே தரும். ஆனால் அப்படியே அலட்சியமாக இருந்தால், சிறிது நேரத்திலேயே மரணத்தை உறுதி செய்துவிடும். இந்த பாம்பு கடித்தால், கண் இமைகள் கனப்பது, பார்வை இரட்டையாவது, பேச்சு குழறுவது மற்றும் உடல் பலவீனம் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.
நல்ல பாம்பு
மனிதர்களுக்கு மிகவும் பழக்கமான பாம்பாக இருக்கம் நல்லபாம்பு, தன்னை யாராவது நெருங்கினால். படம் எடுத்து எச்சரிக்கும். மீறி நெருங்கினால் கடித்துவிடும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, நரம்புகளுக்கும் தசைகளுக்கும் இடையே உள்ள தொடர்பைத் துண்டிக்கும். இதனால் சுவாசிக்க முடியாமல் உயிர் இழப்பு ஏற்படும்.
சுருட்டை விரியன்
இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி மரணங்களில் அதிகமானவை இந்த சுருட்டை விரியன் கடிப்பதால் தான் நிகழ்கிறது. பொதுவாக, மலை அடிவாரங்களிலும், விவசாய நிலங்களிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இதன் விஷம் ரத்தம் உறைவதைத் தடுத்து, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us