/indian-express-tamil/media/media_files/4q0a4Prdd4GLpWknpIX0.jpg)
பொதுவாக இல்லத்தரசிகளுக்கு வீட்டை சுத்தம் செய்வது என்றாரே பெரிய மலைப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக, பண்டிகை காலங்கள், அல்லது திடீரென வீட்டுக்கு கெஸ்ட் வந்துவிட்டார்கள் என்றால், அவர்களிடம் தங்கள், வீட்டை சுத்தமாக எப்போதும் வைத்திருப்போம் என்பதை காட்டுவதற்காகவே அவசர அவசராமாக சுத்தம் செய்யும் பணிகளை செய்வார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி அந்த வேலையை முடிக்க முடியுமா என்றால் அது டவுட்டு தான்.
அதே சமயம் இந்த சிம்பிள் ட்ரிக்ஸை பயன்படுத்தி டைல்ஸ், கிச்சன் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இப்போதெல்லாம் நாம் அனைவரும் வீட்டைச் சுத்தம் செய்ய அதிக அளவில் ரசாயனக் கலவை கொண்ட திரவங்களைப் பயன்படுத்துகிறோம். இவை சில சமயங்களில் நம் கைகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லதல்ல. இதன் மூலமாகவே நோய் தாக்கங்களும் அதிகமாக ஏற்படுகிறது.
செயற்கையான ரசாய திரவங்களை விளம்பரம் செய்யும்போது கூட அதை இயற்கையான பொருட்கள் வைத்து தான் தயாரிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எளிதாக கிடைக்கும் இயற்றை பொருட்களை பல விஷயங்களில் பயன்படுத்த நாம் தவறிவிடுகிறோம். அந்த வரிசையில், நீங்கள் இந்த எளிய, இயற்கையான குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். இதன் பலனைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!
தேவையான பொருட்கள்:
எலுமிச்சைத் தோல் - 3 முதல் 4 துண்டுகள்
சமையல் சோடா / அப்பச் சோடா - 1 தேக்கரண்டி (ஒரு ஸ்பூன்)
சோப்புத் தூள் - 1 தேக்கரண்டி (ஒரு ஸ்பூன்)
தண்ணீர் - ஒரு தம்ளர்
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எலுமிச்சைத் தோல், சமையல் சோடா, சோப்புத் தூள், தண்ணீர்) ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த இந்தக் கலவையை வடிகட்டி எலுமிச்சைத் திரவத்தை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். இந்தத் திரவத்தைப் பயன்படுத்தும் முன், ஒருமுறை நன்றாகக் குலுக்கிவிடவும்.
இந்த இயற்கையான சுத்திகரிப்புத் திரவத்தை நீங்கள் கேஸ் அடுப்பு, தரைக் டைல்ஸ், மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவதற்குப் பயன்படுத்தலாம். கிச்சனில் சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.