ஏப்ரல் 14 நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, இலக்கியத்திற்கும், இசைக்கும், கிராமிய கலைகளுக்கும் பெயர்போனது. மேலும் செம்மொழி என்ற தனிச் சிறப்பு கொண்டது. இந்நிலையில் இவை அனைத்தும் போற்றும் வகையில் நாளை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

கோவிலில் நாம் வணங்கும் பொது, மாம்பழம், பலாப்பலம், வாழைப்பழத்தை இறைவனுக்கு படைப்பார்கள். தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள், நகைகள், பூக்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்குவார்கள். வீட்ற்கு முன்பாக அரிசி மாவில் கோலம் போடுவார்கள்.

கோலம் என்பது எப்போதும் அரிசி மாவு கலந்து போடப்படுகிறது. எறும்பு போல சின்ன உயிர்களுக்கு இதை சாப்பிட்டு உயிர் வாழும் என்ற எண்ணத்தில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதிலும் வெவ்வேறு வகையான கோலங்கள் வரையப்படுகிறது. இதில் குறிப்பாக ரங்கோலி கோலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது நண்பர்கள் அல்லது மற்றவர்களை வரவேற்கும் விதமாக கோலம் போடப்படுகிறது. மனிதன் நாகரிக வளர்ச்சியடையும்போது, குகைகள், மரங்களில் அவன் ஓவியம் வரைந்தான். சிறு சிறு சின்னங்களை வைத்து தனக்கு சுற்றி நடைபெற்ற விஷயங்களை, குகைகளில் செதுக்கினான்.

இந்நிலையில் இதுபோலத்தான் கோலங்களும் பல்வேறு வடிவங்களை ஒன்றாக இணைத்து வரையப்படும் ஒரு கலை.இந்நிலையில் நாளை இந்த கோல வகைளில் ஒன்றை வீட்டிற்கு முன்பாக போடுங்கள்,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “