மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்று உணவு. உணவு பொருட்கள் கிடைப்பதற்கு விவசாயம் மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் கூட, நம் முன்னோர்கள் காலத்தில் இருந்த விவசாய பொருட்கள் இப்போது மெல்ல மெல்ல விஷமான பொருட்களாக மாறி வருகின்றது என்று சொல்லலாம்.
நம் முன்னோர்கள் கால்நடைகள், மற்றும் பறவை இனங்களிக் கழிவுகளை உரமாக பயன்படுத்தி விவாசயம் செய்து உணவு பொருட்களை விளைவித்தார்கள். அந்த உணவை சாப்பிட்ட மக்கள் பல வருடங்கள உயிர் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகள் ரசாயணம் கலந்த உரத்தை பயன்படுத்தி விளைவிக்கும் உணவு பொருட்கள் விஷத்தன்மையுடனும், மக்களின் ஆயுட் காலத்தை குறைக்கும் வகையிலும் உள்ளது.
ஆனாலும் விவாயத்தில் மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் பலரும் தெரிந்தே இந்த ரசாயண உரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரசாயண உரத்தை விட இயற்கையான உரத்தில் மகசூல் அதிகம் கிடைக்கும் என்பதும், இயற்கை உரத்தை பயன்படுத்தும்போது செலவும் குறைவும் என்பது பல விவசாயிகளுக்கு தெரியாத ஒரு தகவலாகவே உள்ளது.
இந்த செயல்முறையை தெரிந்துகொண்ட ஒரு சில விவசாயிகள் தற்போது இயற்கை உரம் பயன்படுத்தும் வேளான்மைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இயற்கை வேளான்மை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தன்னுடன் இருக்கும் பலருக்கும் கற்றுக்கொடுக்கும் சின்னசேலம் கனியாமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பரை சில கேள்விகளை கேட்டோம்.
உங்களது படிப்பு மற்றும் வேலை பற்றி சொல்ல முடியுமா?
நான் பிபிஏ, எம்எம்எம், டிஇஎம், டிஎஃப்டெக் படித்திருக்கிறேன். இதில் பயாலஜிக்கல் பற்றி நான் எதுவும் படிக்கவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் மைக்கோர் ஆர்கானிசம் கற்றுக்கொண்டேன். நான் வேலை பார்க்கும்போது ஒரு 6 மாத காலம், பயோ ஃபிட்லைசர் லேபரேட்டரியில் வேலை பார்தேன். அங்கு கற்றுக்கொண்டு தான் நான் முழுவதும் விவசாயத்தில் இறங்கினேன்.
ஆர்கானிக் ஃபார்மிங் தேர்வு செய்ய காரணம் என்ன?
முழுவதும் விவசாயத்தில் இறங்கிய பிறகு நான் கற்றுக்கொண்டதை எனது நிலத்தில் பயன்படுத்த தொடங்கினேன். ஆர்கானிக் ஃபார்மிங் பண்ண வேண்டும் என்பதற்றாக இதை செய்யவில்லை. விவசாய செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவே இதை தேர்வு செய்தேன். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் மாத சம்பளம் வரும் என்ற ஒரு உத்தரவாதம் இருக்கும். ஆனால் விவசாயத்தில் அந்த உத்தரவாதம் நம்பிக்கை எதுவும் இல்லை. அதனால் முழுக்க முழுக்க ஆர்கானிக் ஃபார்மிங் செய்வது எனது நோக்கம் அல்ல. ஆனால் இன்று ரசாயண உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்க ஆகும் செலவு நமக்கு கிடைக்கும் லாபத்தை விட அதிகம். அதனால் தான் நான் இயற்கை விவசாயத்தை தேர்வு செய்தேன்.
வேலை பார்த்து வந்த நீங்கள் விவசாயத்திற்கு வந்தது எப்படி?
விவசாயத்திற்கு நான் வந்ததே விபத்து என்று சொல்லலாம். நான் வேலை செய்தபோது 15 ஏக்கர் சம்பங்கி பூ நிலத்தை சரி செய்து கொடுத்தேன். அந்த நிலத்தின் ஓனர் 50 லட்சம் கடனில் இருந்தார். 15 ஏக்கர் சம்பங்கி பூ உற்பத்தியில் செலவுகள் எல்லாம் போக ஒரு ஏக்கருக்கு 5-7 கிலோ மட்டும் தான் கிடைத்தது. நிறைய கெமிக்கல் கலந்த உரத்தை கொடுத்து மண்ணின் தன்மை போய்விட்டது. அந்த நிலத்தை நாங்கள் சரி செய்து ஒரு ஏக்கருக்கு 80-100 கிலோ வரை எடுத்து கொடுத்தோம். இதன் மூலம் அவர் ஒரே மாதத்தில் தனது கடன் முழுவதையும் அடைத்தார்.
அதன்பிறகு என்னை வீட்டில் வந்து சந்தித்து மரியாதை செலுத்திவிட்டு சென்றார். அவர் ஒரு மாதத்தில் தனது கடன் முழுவதையும் அடைத்துவிட்டாதால் நாமும் விவசாயம் செய்யலாம் என்று யோசனை வந்தது. எங்கள் வீட்டிலும் அதையே தான் சொன்னார்கள். அதன்பிறகு நான் முழுவதும் விவசாயத்தின் பக்கம் திரும்பிவிட்டேன்.
நீங்கள் வேலை பார்க்கும்போது கிடைத்த சம்பளம் விவசாயத்தில் கிடைக்கிறதா?
நான் 2011-ல் வேலையை விடும்போது எனது சம்பளம் 76.5 ஆயிரம் ரூபாய். ஆனால் விவசாயத்தை அவ்வளவு கிடைக்குமா என்றால் முடியும், சம்பங்கி மாதிரியான விவசாயம் செய்யும்போது பண்ணலாம். நான் வேலையில் இருந்துகொண்டு விவசாயம் பார்த்தால் 3 மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வர முடியும். அதே சமயம் வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் இறங்கினால் அந்த சம்பளம் இங்கு கிடைப்பது சந்தேகம் தான். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.
ஆர்கானிக் ஃபார்மிங் செய்ய தொடங்கியது எப்போது?
நான் முதலில் எனக்காகத்தான் ஆர்கானிக் ஃபார்மிங் செய்ய தொடங்கினேன். இந்த ஆர்கானிக் ஃபார்மிங்க்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து வாங்காமல் நானே உற்பத்தி செய்ய தொடங்கினேன். எனக்கு கற்றுக்கொடுத்த குரு, பஞ்சகவி அல்லது ஜீவாமிர்தம், இவற்றை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லிக்கொடுத்தார். அதன்படி எனக்கு தேவையான பொருட்களை நானே உற்பத்தி செய்து கொண்டேன்.
பஞ்சக்கவி அல்லது ஜீவாமிர்தம் என்றால் எனன்?
இன்று ஜீவாமிர்தம் ஒரு பொருளாக யாரும் நினைப்பதில்லை. அந்த காலத்தில் இதை பஞ்சக்கவி என்று சொல்வார்கள். மாட்டின் சாணத்தில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா வைத்துதான் இதை செய்ய வேண்டும். உலகத்தில் உள்ள எந்த ஒரு கால்நடை மற்றும் விலங்கினமாக இருந்தாலும், அதன் வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பசுவின் உடலில் எல்லா நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், நன்மை தரும் மைக்சோர் ஆர்கனிசம் என அனைத்தும் இருக்கிறது.
பசுவின் வயிற்றில் இருந்து சாணம் வெளியில் வரும்போது அதில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை வைத்துதான் எல்லா மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. இது இல்லாமல் இன்னும் ஒரு பொருள் கூட தயாராகவில்லை. இதனால் இதை வைத்து ஆர்கானிக் விவசாயத்தை தொடங்க முடிவு செய்தேன். அதேபோல் பயோ ஃபார்மிங்கில் அசோர்ஸ்பெர்லம் என்ற ஒன்று இருக்கிறது. இது காற்றில் இருக்கும் தழைச்சத்தை கிரகிச்சி சேர்க்க கூடியது. அந்த அசோர்ஸ்பெர்லம் மாட்டு சாணத்திலும் நிறைய உள்ளது. இதை கல்ச்சர்ஸ் வைத்து விரிவாக்கம் செய்து எடுக்கக்கூடியது தான் பஞ்சக்கவி என்று சொல்வார்கள். லேபரேட்டரியில் என்ன செய்கிறார்களோ அதே வேலையை விசாயிகள் செய்யலாம். இது கல்ச்சுரல் டெலவப்மெண்ட் தான்.
அறிவியல்பூர்வமாக பார்த்தால் மாட்டின் சாணத்தை எடுத்து அதில் நெய் சேர்த்து பிசைந்து வைக்கிறார்கள். உலகத்திலேயே அதிக ஆக்ஸிஜன் உள்ள உணவு பொருள் நெய். இந்த உணவை சாணத்துடன் சேர்த்து வைக்கும்போது நெதித்தல் திறன் ஏற்பட்டு உரமாக மாறுகிறது. இதை திரும்ப திரும்ப செய்து, அதன்பிறகு அதில்இருந்து கல்சுரல் எடுத்து பயன்படுத்தலாம். இது தான் அறிவியல் பூர்வமான முறையில் தயார் செய்யப்படும் பஞ்சக்கவி.
ஜீவாமிர்தம் என்பது 15 கிலோ சாணத்தில் 2 கிலே வெல்லம், ஒரு கிலோ பயர் மாவு சேர்த்து ஒரு 200 லிட்டர் பேரலில் 180 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதன்பிறகு 10 லிட்டர் கோமியத்தை கலக்க வேண்டும். கோமியத்தை முதலில் ஊற்றினால் சாணத்தில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா இறந்துவிடும் என்தால் முதலில் அதை சேர்க்க கூடாது இதில் இருந்து கிடைப்பது தான் நம் பாரம்பரியமாக செய்து வரும் ஆர்கானிக் விவாசயத்திற்காக மருந்து. இது மிகவும் எழிமையான வழி.
உலகத்திலேயே மிகவும் தரமான உரம், மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றால் அது ஜீவாமிர்தம் தான். பயிற்களுக்கு முக்கிய சத்துக்களாக தழைச்சத்து, மணிச்சத்து சாம்பல் சத்து (NPK) இதை கூடுதலாக ஜீவாமிர்தத்தில் சேர்த்தால் மார்டன் ஆர்கானிக் ஃபார்மிங்கும் நமது கலாச்சார ஆர்கானிக் ஃபார்மிங்கும் ஒன்று சேர்ந்தது போல் இருக்கும். இந்த முறையில் செய்யும்போது மைக்ரோ ஆர்கனிசம் அதிகமாக இருக்கும். இப்படி செய்யும்போது ரசாயண உரம் போட்டு செய்யும்போது எவ்வளவு மகசூல் கிடைக்குமோ அதே அளவு கிடைக்கும்.
இதை 4-5 புதிய முறைகளை விரிவாக்கம் செய்து வருகிறேன். இதை பயன்படுத்தும்போது பூச்சிகள் மற்றும் புழுக்கள் என பயிர்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இதை விவசாயிகளுக்கு பிராண்ட் வைத்து நான் விற்கவில்லை. ஃபார்முலாவை அவர்களிடம் சொல்லி அவர்களே அதை தயார் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறேன். இந்த முறையில் தயாரிக்கும்போது விவசாயிகளுக்கு செலவு மிச்சமாகும். பாரதி கிசான் சங்கத்தின் நான் உறுப்பினராக இருக்கிறேன். சங்கத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இதை சொல்லிக்கொடுத்து வருகின்றேன். சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இந்த மெத்தேடு பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள்.
ரசாயண உரங்கள் போட்டு பழக்கப்பட்ட நிலத்தில் திடீரென ஆர்கானிக் உரத்தை போடும்போது பாதிப்பு இருக்குமா?
ரசாயண உரத்திற்கும் இயற்கை உரத்திற்கும் 3 நாட்கள் இடைவெளி இருந்தால் போதுமானது. இன்றிலிருந்து இயற்கை உரம் பயன்படுத்த போகிறேன் என்று சொல்பவர்கள் இதற்கு முன்பு தனது நிலத்திற்கு 100 கிலோ உரம் பயன்படுத்திருந்தால் அதை பாதியாக குறைத்துகொண்டு இயற்கை உரத்தை பாதி சேர்க்க வேண்டும். 5 சதவீதம் கார்பன் இருந்தால் இது வளமாக மண் என்று உலக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். 100 கிலோ மண் என்றால் அதில் 5 கிலோ எரு இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய மண்ணில் சாராரியாக 0.5 சதவீதம் மட்டுமே கார்பன் உள்ளது. இதில் பற்றாக்குறையாக 4.5 கிலோ உள்ளது.
இப்படி ஒரு நிலையில் முழுவதும் இயற்கை விவசாயம் செய்கிறேன் என்று சொன்னால் அது வேலைக்கு ஆகாது. அதனால் இந்த பயிருக்கு பாதியளவு இயற்கை உரமும், பாதியளவு ரசாயண உரமும் பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு அடுத்த பயிருக்கு பாதிளவு என படிப்படியாகத்தான் ரசாயண உரத்தை குறைக்க வேண்டும். அதேபோல் ரசாயன உரம் பயன்படுத்தும்போது பூச்சிக்கொல்லி மற்றும் இயற்கை உரம் வேலை செய்யாது என்பது பொய். இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்ணின் கார்பன் தன்மையை அதிகாரிக்க ஆடு, மாடு மற்றும் கோழி எருக்களை பயன்படுத்தலாம்.
உங்களின் அடுத்த ஆய்வு எதை பற்றியது?
நமது பாரம்பரியத்தில் இருந்தது தான். சில தாவரங்கள் பூச்சிகளை திறம்பட எதிர்க்கக்கூடிய சக்தி உள்ளது. அந்த தாவரத்தின் இலையில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தை கத்தரிக்காய் மீது ஸ்பிரே செய்தால் 10 நிமிடத்தில் பூச்சி கத்தரிக்காயில் இருந்து வெளியில் வந்து இறந்துவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தாவரங்கள் இருக்கிறது. அந்த தாவரத்தின் அல்க்லைடு மட்டும் தனியாக எடுத்து மருத்து உற்பத்தி செய்வதற்காக ஆய்வில் இருக்கிறேன்.
நீங்கள் செய்யும் இயற்கை உரங்கள் அனைத்து பயிர்களுக்குமானதா? அல்லது குறிப்பாக சில தாவரங்களுக்கு மட்டுமானதா?
மைக்ரோ ஆர்கனிசம் பொருத்தவரை உலகளவில் இருக்கும் ஒன்றை தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். குலுக்கலஅசிட் .ஃபேக்டர் மண்ணில் இருக்கும் இனிப்புத்தன்மையை அதிகரிக்கும். குறிப்பாக பழங்களை பயிரிடுவதற்கு இதை பயன்படுத்தலாம். கரும்புக்கு ஏற்கனவே இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் அதில் குலுக்கலஅசிட் .ஃபேக்டர் கொடுக்கும்போது மேலும் இனிப்பு சுவை உடையதாக மாறும். அதேபோல் பயிர்வகை பயிர்களுக்கு ரைசோபியம் என்ற ஆர்கானிக் உள்ளது. கடலை, உளுந்து, தட்டை பயறு, சோயா மொச்சை இந்த மாதிரியான பயிர்களுக்கு சைசோபியம் பயன்படுத்தலாம். இதை தவிர மற்ற அனைத்திற்கும் பொதுவான மருந்தை பயன்படுத்தலாம். அதேபோல் ரசாயண உரத்தை காட்டிலும் மண்புழு உரம் பயிர்களுக்கு பெரும் நன்மை.
முழுவதும் விவசாயத்தில் இறங்கிய பிறகு வேலையை ஏன் விட்டோம் என்று யோசித்திருக்கிறீர்களா?
2019-ல் ஏற்பட்ட வறட்சியின் போது யோசித்தேன். அந்த நாட்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்குதான் தண்ணீர் இருந்ததே தவிர மற்ற எதற்கும் தண்ணீர் வசதி இல்லை. வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரமான சம்பளம் உண்டு. ஆனால் இயற்கை செய்யும் செயல்கள் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வறட்சியின்போது விவசாயம் பார்க்க முடியாது. மழை காலம் கடந்து போகும், காற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் வறட்சி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்போது நான் யோசித்தது மரம் வளர்ப்பது மிகவும் முக்கியம் என்று.
மரம் முக்கியம் தான் ஆனால் என் இடத்தில் வளர்க்க மாட்டேன் என்று பலரும் நினைக்கிறார்கள். அரசாங்கத்தின் சார்பிலும் மோசமாக உள்ளது. அந்த காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மழை தருவதற்காக காடுகள் நிறைந்திருக்கும். குறைந்தபட்சம் 15 ஏக்கரில் இருந்து அதிகபட்சம் 200 ஏக்கர் வரை இந்த காடுகள் இருந்தது. அதேபோல் ஏரியில் நாட்டு கருவேலமரங்கள் தண்ணீர் ஆவியாவதை தடுத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் ஒரு நிலையை உருவாக்கி வந்தது. ஆனால் இப்போது பல ஏரிகள் சில வருடங்களாகவே வறண்டுபோய் உள்ளது. ஏரியில் இருந்த கருவேல மரம் அகற்றப்பட்டு சீமகருவேல மரம் ஆக்கிரமிப்பு வந்துவிட்தே இதற்கு காரணம். இதற்கு மாற்றாக இலுப்பை போன்ற மழை தரும் மரங்களை நட வேண்டும்.
நீங்கள் செய்யும் இயற்கை விவசாயம் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எப்போது நினைத்தீர்கள்?
சம்பங்கி பண்ணிக்கொண்டிருக்கும்போது மற்றவர்களின் சம்பங்கியில் பிரச்சனை என்று பூக்கடைக்கு வரும்போது சொல்வார்கள். அப்போது அவர்களுக்கு ஐடியா கொடுக்க தொடங்கினேன். அதன்பிறகு மஞ்சள் மற்றும் சேனை கிழங்கு தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஆலோசனை கொடுத்தேன். கேட்கிறவர்களுக்கு தீர்வு சொல்ல தொடங்கிய அதன்பிறகு குறைந்த விலையில் கல்சர் விற்பனை செய்து அதை எப்படி டெவலப் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க தொடங்கினேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.