Pongal Festival Different Pongal Recipe Update : உலக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. விவசாயம், விவசாயிகள், கால்நடைகள், மற்றும் சூரிய பகவானை போற்றும் வகையிலான பொங்கல் பண்டிகை ஒரு வாரம் விமர்சையான கொண்டாடப்படுகிறது. விவசாயிகளை போற்றும் வகையில் உள்ளதால் இதற்கு உழவர் திருநாள் என் பெயரும் உண்டு.
தென்னிந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, இலங்கை சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் ஆண்டு முழுவதும் உழைக்கும் விவசாயிகள், அறுவடை முடிந்தவுடன் எடுக்கும் திருவிழா தான் பொங்கல். இந்த நந்நாளில், அறுவடைக்கு உதவும், கால்நடைகள், கடவுள் சூரிய பகவான், மற்றும் இயற்கையை தெய்வமாக வணங்குவது வழக்கம்.
இதில் முதல் நாள் சூரியன் பொங்கல் என்றும், மறுநாள் கால்நடைகளுக்காக மாட்டுப்பொங்கல் என்றும், அடுத்த நாள் விவசாயிகளுக்காக காணும் பொங்கல் என்றும் நம் முன்னோர்கள் வரையெறுத்துள்ளனர். அறுவடை செய்ததில் கிடைத்த நெல்லில் அரிசி எடுத்து அதை சர்ச்சரை பொங்கலாக செய்து முதலில் சூரியனுக்கு படைப்பதே சூரியன் பொங்கலின் உன்னதமாகும்.
பொங்கல் வைப்பது எப்படி?
ஆடியில் விதை விதைத்து அதை மார்கழி இறுதியில் அறுவை செய்வதால் தை முதல்நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த அறுவடையில் கிடைத்த முதல் அரிசியை சர்க்கரை, பால் நெய், சேர்த்து புதுப்பானையில் பொங்கல் வைக்க வேண்டும். தை முதல்நாள் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இந்தபொருட்களை தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி விடுவர்கள்.
பொங்கல் திருநாளில் படையலுக்கு வைக்கப்படும் சில வகை பொங்கல் :
சர்க்கரை பொங்கல் :
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி – ஒருகப்
பாசி பருப்பு – அரைக்கப்
பால் – ஒரு கப்
வெல்லம் – 2 கப்
நெய் – 10 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிதளவு
திராட்சை சிறிதளவு
ஏலக்காய்பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
குக்கரை அடுப்பில் வைத்து அதில ஒரு டேபிஸ் ஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை நன்றாக வறுத்தக்கொள்ளவும். அதன் பிறகு அதில் பச்சரிசியை சேர்ந்து நன்றாக கிளறிக்கொள்ளவும். அடுத்து இந்த கலவையில் 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பாலை சேர்ந்து நல்லாக கிளறி மூடி வைக்கவும். தண்ணீர் எவ்வளு அதிகமாக சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு பொங்கல் நன்றாக குழைந்து வரும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன் அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் டேபிஸ்பூன் நெய் விட்டு முத்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும. அதன்பிறகு குக்கரில் பொங்கல் வெந்தவுடன் இந்த வெல்ல பாகை அதில் சேர்த்து நன்றாக களறவும்.
அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து அதனுடன் வாசனைக்கு ஏலக்காய் பொடியை சேர்க்கவும். அதன் பிறகு சிறிது நேரம் முடிவைத்து எடுத்தால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார். எளிமையான இந்த செய்முறையை நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள்
கருப்பட்டி பொங்கல் :
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு கப்
பால் – 3 கப்
கருப்பட்டி தூள் – ஒரு கப்
நெய் – அரை கப்
சுக்குத்தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி திராட்சை – தேவையான அளவு
செய்முறை :
அரிசியை நன்றாக கழுவி எடுத்தக்கொண்டு, ஒரு பாத்திரத்தில், அரிசி, 2 கப் பால் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக வேகவைக்கவும். அதன்பிறகு, மற்றொரு அடுப்பில் கருப்பட்டி தூளுடன் கால்கப் பால் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை நன்றாக கிளறவும். கருப்பட்டி கரைந்தவுடன் அதனை வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்தக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வேகவைத்துள்ள அரிசியில் பால் மற்றும் தண்ணீர் வற்றியவுடன், கருப்பட்டி கரைசலை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அதனுடன் மீதமுள்ள பாலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறவும். அடுத்து அதில் சுக்குத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்தவுடன், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
பாரம்பரிய மண்பானை சர்க்கரை பொங்கல் :
தேவையான பொருட்கள் :
பொன்னி பச்சரிசி – ஒரு கப்
பாசி பருப்பு – அரைக்கப்
பால் – ஒரு கப்
அரிசி ஊறிய தண்ணீர் – ஒரு கப்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – சிறிதளவு
நெய் – அரைக்கப்
முந்திரி திராட்சை, தேங்காய் துருவல் – சிறிதளவு
செய்முறை :
முதலில் பாசி பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்தககொள்ளவும். அடுத்து அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து அதில், வறுத்த பாசிபருப்பை சேர்க்கவும். அதன்பிறகு அரிசி ஊறிய தண்ணீர் ஒரு கப், பால் அரைகப், தண்ணீர் 3 கப் சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கலவையில் சிறிதளவு அருகம்புல்லை சேர்த்தக்கொள்ளவும் (முடிந்தால்)
அதன்பிறகு இந்த கலவை நன்றாக கொதித்து பொங்கி வரும்போது அதில், அரிசி, கடலைப்பருப்பு மற்றும் பாசி பருப்பை சேர்க்கவும். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து வரும்போது அதில் 2 கப் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பிறகு இந்த கலவையில், சிறிதளவு, ஜாதிக்காய் பொடி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். அதன்பிறகு பொங்கல் திக்காக வரும்வரை சிறிய இடைவெளியில் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விடவும்.
பொங்கல் ஒரு பதத்திற்கு வந்த உடன் அதனை எடுத்து தனியாக வைத்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து பொங்கலில் சேர்க்கவும். சுவையான பாரம்பரிய பொங்கல் தயார். இந்த பொங்கலை மண்சட்டியில் செய்யும்போது இதன் சுவை மேலும் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.