Immunity Booster Inji rasam Tamil video: இன்றைய காலகட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றே தோன்றுகிறது. அந்த வரிசையில் நிச்சயம் இந்த இஞ்சி ரசம் கைகொடுக்கும்
Advertisment
இஞ்சி அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, அருமருந்தும் கூட! அஜீரணப் பிரச்னையை சரி செய்வதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கும். இஞ்சி சாறாக பருகுவது ஒருபுறமிருக்க, இஞ்சியை ரசம் வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
இந்த இஞ்சி ரசம், சுவையாகவும் அருமருந்தாகவும் அமையும். இஞ்சி ரசம் செய்யும் முறையை இங்கு காணலாம்.
Ginger rasam Tamil Recipe video: இஞ்சி ரசம்
இஞ்சி ரசம் செய்யத் தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு – கால் கப், பூண்டு – 5 பல், மிளகு – 2 டீ ஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, சீரகம் – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – சிறிதளவு, எலுமிச்சை சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, கடுகு – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி ரசம் செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் வடித்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும். மசாலா தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவுங்கள். பின்னர் இறக்கி பரிமாறவும். இப்போது இஞ்சி ரசம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil