ஓமம், மஞ்சள் ஒரு டீஸ்பூன் சேருங்க… பொன்னிறத்தில் பூரி ரகசியம் இதுதான்!

Tamil Health Tips : கோதுமை மாவில் செய்யப்படும அனைத்து உணவு பொருட்களும் மனிதனுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது

Tamil Recipe Update : இந்தியா முழுவதும் பரவலாக சாப்பிடும் உணவில் முக்கியமான ஒன்று பூரி. கோதுமை மாவில் செய்யப்படும் இந்த உணவு பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. சத்துக்கள் நிறைந்த கோதுமை மாவில் செய்யப்படும அனைத்து உணவு பொருட்களும் மனிதனுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. இதில் பூரிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த பூரி செய்யும்போது பலரும் சிக்கல்களை சந்திப்பது உண்டு. இதனால் பூரி சாப்பிடும போது சுவையற்றதாக வெறுக்கும் நிலை ஏற்படும் நிலை உருவாகும்.

நாங்கள் அடிக்கடி உங்களுடன் ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலை உணவு வகைகளை பகிர்ந்து கொள்கிறோம். அந்த வகையில், உங்களுடைய குடும்பத்தினருடன் உதட்டை சுவையில் காலை உணவை அனுபவிக்க அஜ்வைன் அல்லது ஓமம் பயன்படுத்தி பூரி செய்வது எப்படி என்பதை அர்ச்சனாவின் சமையலறையின் அர்ச்சனா தோஷி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 250 கிராம்

அஜ்வைன் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி –

உப்பு, தேவைக்கேற்ப

சூரியகாந்தி எண்ணெய்

செய்முறை

முதலில் கோதுமை மாவு, ஓமம் விதைகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கெட்டியான மாவை பிசைவதற்கு போதுமான தண்ணீருடன் கலக்கவும். இறுதியில், பிணைக்க இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.

அதன்பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருவாக்கி, ரோலிங் பின்னைப் பயன்படுத்தி ஒரு பலகையில் உருட்டவும். மாவின் தடிமன் மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது. அதன்பிறகு கடாயில் எண்ணெயை சூடாக்கி ஒரு சிறிய மாவை உருண்டையைச் சேர்த்து, எண்ணெய் காய்ந்துவிட்டதா இல்லையா என்பதை சோதிக்கவும்.

எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்துள்ள மாவை அதில் போடவும். அதில் மாவு விரைவாக எழுந்தால் பூரி நன்றாக தயாராகும்.  இப்போது மெதுவாகவும் கவனமாகவும் பூரிகளை எண்ணெயில் போடவும். அது உப்பியவுடன், பூரியை உங்கள் கரண்டியை வைத்து கீழே அழுத்தவும், பூரியைத் திருப்பி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். முடிந்தவுடன், அதிகப்படியான எண்ணெயை அகற்ற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். பூரியை அமிர்தசாரி ஆலு அல்லது பாலக் மகானா மற்றும் பூண்டு ரைத்தாவுடன் பரிமாறலாம். சுவையான பூரி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe start your day with delicious ajwain puris

Next Story
என்னதான் மேக்-அப் போட்டாலும் இது மிகவும் முக்கியம் – தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா பியூட்டி டிப்ஸ்!Thamizhum Saraswathiyum Nakshatra Beauty Skincare Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com