அவசர ”லஞ்ச்க்கு” ஆரோக்கியமான உணவு; மணக்கும் தேங்காய்ப்பால் சாதம் செய்வது எப்படி?

Heath Food Coconut Milk Rice : தேங்காய் பால் தாய்பாலுக்கு இணையான சந்துக்கள் நிறைந்தாக கூறப்படுகிறது. தேங்காய் பாலை நாம் உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

How To Make Coconut Milk Rice : இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த பொருட்களை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது நமது உடல் நோய் அபாயமின்றி நாம்  ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும். அந்த வகையில் இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களில் ஒன்று தேங்காய்.

தேங்காயில் பல மருத்துவ நன்மைகள் உள்ளது. அதிலும் தேங்காய் பால் தாய்பாலுக்கு இணையான சந்துக்கள் நிறைந்தாக கூறப்படுகிறது. தேங்காய் பாலை நாம் உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இவ்வாறு பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேங்காய் பாலில் சாதம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துண்டா?

இப்போது தேங்காய் பால் சாதம் செய்பவது எப்படி என்பதை பார்போம் :

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்

தேங்காய் பால் – ஒன்னரை கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

முந்திரி – சிறிதளவு

நெய் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பட்டை – 1

ஏலக்காய் – 3

பிரியாணி இலை -1

கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை :

முதலில் பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து நன்கு தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அடுப்பில் குக்கரை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே எண்ணெய்யில், பட்டை ஏலக்காய் பிரியாணி இல்லை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளாகய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்நிறமாக ஆனவுடன் சிறிதளவு உப்பு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் ஒன்னரை கப் தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் நன்றாக கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்த்து குக்கரை மூடவும். அளவான தீயில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அதனை திறந்து வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலையை அதனுடன் சேர்த்து கிளறி விடவும். இப்போது சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe update how make heath food coconut milk rice

Next Story
தந்தையர் தினத்திற்கு வாழ்த்திய மகன் – பிக் பாஸ் ரேஷ்மாவின் நெகிழ்ச்சி பதிவு!Bigg Boss Reshma Pasupuleti son wishes for Fathers day video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express