சீரியல் பிரபலம் அர்ச்சனா குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில், தேனு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் அர்ச்சனாவுக்கு நிறைய ரசிகர்களை தேடித் தந்தது.
இப்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் அர்ச்சனா கேரெக்டரில் நடிக்கிறார்.
அர்ச்சனா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அதில் தொடர்ந்து புகைப்படங்கள், ரீல்ஸ், போட்டோஷூட்களை பதிவிட்டு, ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பார். குறிப்பாக அர்ச்சனாவின் சுருட்டை முடிக்காகவே, இணையத்தில் பலரும் இவரை தேடி தேடி பார்க்கின்றனர்.
முன்ன்னதாக அர்ச்சனா ஒருமுறை இன்ஸ்டாகிராமில் பெரிய அண்ணனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், ”சின்ன வயசுல ஒவ்வொரு வருடமும் சின்னா வரான் சொன்னதும் என்னலாம் பண்ணி, ஸ்கூல் லீவு போடலாம்னு அந்த இரண்டு சந்தோஷமான மாதங்கள் மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. நாங்கள் ஒன்றாக படங்களைக் கிளிக் செய்ததோ அல்லது இரவு உணவிற்கு வெளியே சென்றதோ எனக்கு நினைவில் இல்லை, ஆனால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பிணைப்பை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் ஒவ்வொரு வருடமும் எனக்கு புதிய பொருட்களை கொண்டு வருகிறீர்கள், இப்போது அதையே செய்ய வேண்டும்:))லிஸ்ட்’அ வாட்ஸ்அப் பண்றேன் பெரிய அண்ணா” என்று அவருடன் கஃபே ஷாப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அர்ச்சனா பகிர்ந்தார்.






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“