தமிழ் சீரியல்கள் பெரும்பாலும் பார்வையாளர்களை தங்கள் தனித்துவமான கதைக்களங்களால் மகிழ்விக்கின்றன. மருமகள், மாமியார் சண்டைகள் ஆண்ட காலம் போய்விட்டது.
இப்போது தமிழ் சீரியல்கள் நடுத்தர வயது பெண்களின் கதைகளைக் காண்பிக்கும் ஒரு புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அவை ரசிகர்களால் விரும்பப் படுகின்றன.
ரட்சிதா மகாலட்சுமி
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களிலும் வந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரச்சிதாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கணவனால் ஏமாற்றப்படும் பாக்யா, சொந்த காலில் நின்று ஜெயிப்பது தான் இந்த சீரியலின் கரு. இந்த பாத்திரம் சுதந்திரமான பெண்களுக்கு ஒரு உந்துதலாக உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சுசித்ரா தமிழில் இயக்குநர் விஜய்யின் 'சைவம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டி.வி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து’ தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் சுஜிதா தனுஷ். தனத்தை போல ஒரு மருமகள் வேண்டும் என்று நினைக்கும் மாமியார்களும், அவரை போல ஒரு அண்ணி, அக்கா வேண்டுமென நினைக்கும் இளம்பெண்களும் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.
இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம், வி.ஜே.தீபிகா, ஷீலா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கயல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அந்த நாடகத்தில் வில்லியாக இவரது நடிப்பு பலரை கவர்ந்தது. இப்போது சைத்ரா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ஹீரோயின்.
மருத்துவமனையில், செவிலியராக இருக்கும் கயல், தந்தையை இழந்து வாடும் குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று நடத்தும் ஒரு சீரியஸான பெண், அவள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்கிறாள். கயல் எப்படி எல்லா தடைகளையும் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இந்த சீரியலின் கதை.
கயல் சீரியலை இயக்குநர் பி.செல்வம் இயக்குகிறார். இவர் இதற்குமுன் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு தொடரை இயக்கியவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“