தீபக் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.
இவரும் சீரியல் நடிகை அபிநவ்யாவும் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா, தனது திறமை மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில், ஆனந்தி கேரக்டரில் நடிக்கிறார்.
தீபக், அபிநவ்யா இருவரும், திருமணம் முடிந்ததிலிருந்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அபிநவ்யா கடந்த அக்டோபர் மாதம், தான் கர்ப்பமாக இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். மேலும் வளைகாப்பு விழாவின் போது எடுத்த படங்களையும் இருவரும் பகிர்ந்தனர். தொடர்ந்து அபிநவ்யா, நிறைய மெட்டர்னிட்டி போட்டோஷூட் எடுத்து, அந்த படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். குறிப்பாக இவர், பொன்னியின் செல்வன் படத்தின் நந்தினி போல மேக்கப் போட்டு எடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்போது இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தீபக் அதில்: எங்கள் மீது பொழிந்த கடவுளின் கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற பரிசை நாங்கள் உணர்ந்தோம். ஒரு சின்ன குழந்தை. செவிலியரால் அவன் என் கைகளில் வைக்கப்பட்டபோது, நான் உயிருடனும், உற்சாகமாகவும் உணர்ந்தேன்.
எங்களுக்கு பையன் பிறந்திருக்கிறான்.
உங்களின் அனைவரின் ஆசிகளும் பிரார்த்தனையும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அம்மா அப்பா ஆன இந்த ஜோடிக்கு சீரியல் பிரபலங்கள் உட்பட பல்வேறு ரசிகர்கள் வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“