Advertisment

ரெஸ்டாரன்ட், காஸ்மெட்டிக் கம்பெனி... சைடு பிசினஸில் இறங்கிய சீரியல் பிரபலங்கள்

வெற்றிகரமான தொழில்களை நடத்தி வரும் தமிழ் டிவி பிரபலங்களின் பட்டியல் இங்கே.

author-image
WebDesk
New Update
Tamil TV Celebrities

Tamil TV Celebrities who are also running successful business

சில தமிழ் டி.வி பிரபலங்கள் வெறும் சின்னத்திரையுடன் நிறுத்தி விடாமல், மற்ற தொழில்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். வெற்றிகரமான தொழில்களை நடத்தி வரும் தமிழ் டிவி பிரபலங்களின் பட்டியல் இங்கே.

Advertisment

                                            

ஷ்ருதிகா

Shruthika Arjun

தமிழில் ஸ்ரீபடம் மூலமாக அறிமுகமானவர் ஷ்ருதிகா. விஜய் டி.வி.யின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

ஷ்ருதிகா ஹேப்பி ஹெர்ப்ஸ் எனும் பெயரில் ஸ்கின் கேர் பிரொடக்ட்ஸ் தயாரித்து வருகிறார். அத்துடன் சொந்தமாக பெண்களுக்காக பிரேத்தியேகமாக தறி எனும் துணிக் கடையும் வைத்துள்ளார்.

கண்டெம்பரரி டிசைன்ஸ், டிரெடிஷனல் பாட்டர்ன்ஸ் உடன் கலைநயத்துடன் நெய்யப்பட்ட புடவைகள் இங்கு பிரபலம்

இந்த புடவைகள் முழுக்க முழுக்க ஷ்ருதிகா டிசைன் செய்தவை

வனிதா விஜயகுமார்

Vanitha Vijayakumar

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வனிதாவுக்கு, தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் வனிதா விஜயகுமார் என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் அடிக்கடி தன்னுடைய சமையல், அவுட்டிங், பியூட்டி டிப்ஸ், மூவி ஷூட்டிங் விலாக் என பல வீடியோக்களை பதிவிடுவார்

இது தவிரவனிதா, சென்னையில் தனது சொந்த ஃபேஷன் பொட்டிக் நடத்தி வருகிறார். இந்த கடையில் ஹேண்ட் பிரிண்டட் புடவை பிரபலம்.

மகேஸ்வரி சாணக்யன்

சன் மியூசிக் சேனல் வந்த புதிதில் அதில், நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. இவர் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, ஆங்கரிங் ஆடிஷனுக்கு சென்று அதில் தேர்வாகி சன் மியூசிக்கில் விஜே ஆனார். அன்று தொடங்கிய அவரது மீடியா பயணம் 18 ஆண்டுகளை கடந்து இன்றும் தொடர்கிறது.

புதுக்கவிதை, தாயுமானவன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் 'அதிர்ஷ்டலட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது.

மகேஸ்வரி ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவர் சொந்தமாக உணவகம், பொட்டிக் போன்ற பல வணிகங்களில் இறங்கியுள்ளார்.

சஞ்சீவ்

வெள்ளித்திரை, சின்னத்திரை என பரிச்சயமான முகத்துக்கு சொந்தக்காரர், சஞ்சீவ்.

'பொன்மனச் செல்வன்' படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்குள் அறிமுகமான சஞ்சீவ், 'மெட்டி ஒலி' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். 2007-ல் விகடன் தயாரிப்பில் இவர் நடித்த 'திருமதி செல்வம்' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சஞ்சீவ், தனது குடும்பம் நடத்தும் காபி ஷாப் தொழிலையும் கவனித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment