ஜெனிஃபர், ஜெயஸ்ரீ, ஷாலினி... உறவுகளால் பழி சுமந்த தமிழ் சீரியல் நடிகைகள்!

திருமண உறவால் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்த தமிழ் சீரியல் நடிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்!

திருமண உறவால் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்த தமிழ் சீரியல் நடிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்!

author-image
abhisudha
New Update
lifestyle

Tamil serial celebrities

காதல் என்பது சொல்லித் தீர்ப்பதல்ல, அது வாழ்ந்து தீர்ப்பது.

ஓர் ஆணும் பெண்ணும் காதலிலோ, திருமண வாழ்விலோ இணைவதைக் காட்டிலும் அந்த உறவை நீட்டித்து எடுத்துச் செல்வதில்தான் பெரும் சவாலே இருக்கிறது. சாதரண மனிதர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், எப்போதும் லைம்லைட்டில் வாழும் மீடியா பிரபலங்களுக்கு இது நிறைய உளவியல் சிக்கல்களையும் கொண்டு வருகிறது.

Advertisment

திருமண உறவால் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்த தமிழ் சீரியல் நடிகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்!

தீபா நடராஜன்

publive-image

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தான் தீபா நடராஜன். விவாகரத்து குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசிய அபிஷேக், அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்துவார் என தீபா மனம் திறந்து பேசினார். 'முதல் தடவை அடிக்கும் போது வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் இல்லை என்று சொல்ல முடியாது, என்று அவர் சொன்னார்.

வி.ஜே.சித்ரா

publive-image

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரெக்டரில் நடித்து பிரபலமான வி.ஜே.சித்ரா, சில ஆண்டுகளுக்கு முன், நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாகக் கிடந்தார்.

Advertisment
Advertisements

ஷூட் முடித்துவிட்டு நள்ளிரவு 1 மணிக்கு சித்ரா ஹோட்டலுக்கு சென்றார்.  அங்கு அவருடைய காதலன் ஹேம்நாத்தும் இருந்தார். சித்ரா, ஹேம்நாத்திடம் நிறைய பணத்தை இழந்ததாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது

ஜெனிபர்

publive-image

செம்பருத்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை ஜெனிபர்.

அவரது முன்னாள் காதலர் நவீன் ஜெனிஃபர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெனிபர் குற்றம் சாட்டினார், இதன் விளைவாக அவர் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் ஜெனிபர் மேலும் கூறினார்.

மேலும் நான் இன்னொரு சித்ராவாக மாற விரும்பவில்லை என்றும், சித்ரா அனுபவித்ததை, உணர்ந்ததாகவும் ஜெனிபர் ஒப்புக்கொண்டார்.

ஜெயஸ்ரீ

publive-image

நடிகை மகாலட்சுமியுடன் நட்பிலிருந்துகொண்டு தன்னை ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ புகார் சொல்ல, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஸ்ரீ மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். ஈஸ்வர், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, அவரின் கணவர் அனில் என ஆளாளுக்குத் தனித்தனியே பிரஸ் மீட் நடத்தி அவரவர் தரப்பு நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தன் குழந்தையை மது போதையில் ஈஸ்வர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அடிக்கடி உடல்ரீதியாக காயப்படுத்தியதாகவும், தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றதாகவும் ஜெயஸ்ரீ கூறினார்.

ஷாலினி

publive-image

முள்ளும் மலரும் புகழ் ஷாலினி சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தனது கணவர் ரியாஸ் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் அவர் சாட்டினார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு சென்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: