/indian-express-tamil/media/media_files/2025/10/09/snake-attack-2025-10-09-16-12-04.jpg)
தனித்துவமான சலங்கை மற்றும் வலிமையான விஷம் ஆகியவற்றால் அறியப்படும் பாம்பு இனங்களில் ஒன்று கிரேட்டல் பாம்புகள். இவை வட அமெரிக்காவின் மிகவும் பயத்தை கொடுக்கும் வேட்டையாடும் பாம்புகள் என்று கூறப்படும் இந்த பாம்புகள், இத்தகைய தற்காப்பு இருந்தபோதிலும், அவை வீழ்த்தப்பட முடியாத அளவுக்கு இல்லை. பல விலங்குகள், கிரேட்டல் பாம்புகளைப் பாதுகாப்பாக வேட்டையாடி உண்பதற்குத் தேவையான சிறப்பு வலிமைகளை பெற்றுள்ளன. இது இயற்கையின் வியக்கத்தக்க சாமர்த்தியத்தை நிரூபிக்கிறது.
இதில் ராஜ நாகம் போன்ற விஷத்தை எதிர்க்கும் பாம்புகள், தேன் கரடி மற்றும் ஓபோசம் போன்ற அச்சமற்ற பாலூட்டிகள், மற்றும் கழுகு, சாலை ஓட்டப்பறவை போன்ற சுறுசுறுப்பான பறவைகள் இந்த பட்டியலில் அடங்கும். கிரேட்டல் பாம்புகளை வேட்டையாடுவதன் மூலம், இந்த உயிரினங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், இதன் மூலம் சூழலியல் சமநிலையின்மையை தடுக்கவும் உதவுகின்றன. இந்த வகையாக கிரேட்டல் பாம்புகளை வேட்டையாடும் உயிரினங்கள் இருக்கின்றன.
ராஜ நாகம் (Kingsnakes)
வட அமெரிக்காவில் மிகவும் திறமையான பாம்பு வேட்டையாடிகளில் ஒன்று ராஜ நாகம் ஆகும். இந்த விஷமற்ற பாம்புகள் தான் ஆனாலும், கிரேட்டல் பாம்புகளைச் சுற்றி வளைத்து, மூச்சுத் திணறச் செய்து, பின்னர் உண்கின்றன. 'பிட் வைப்பர்' எனப்படும் பாம்புகளின் விஷத்திற்கு எதிராக இருக்கும் இயற்கையான எதிர்ப்பு சக்தி தான் ராஜ நாகங்களின் தனிச்சிறப்பு. இந்த எதிர்ப்பு சக்தி, மற்ற பாம்புகளுக்கு அபாயகரமான கடியிலிருந்து அவை உயிர் பிழைக்க அனுமதிக்கிறது.
கிழக்கு இண்டிகோ பாம்பு (Eastern Indigo snakes)
அமெரிக்காவின் மிக நீளமான உள்ளூர் பாம்பான கிழக்கு இண்டிகோ பாம்பு, சாந்தமான ஆனால் வலிமையான வேட்டையாடும் உத்தியைக் கொண்ட விஷமற்ற உயிரினம். கிரேட்டல் பாம்புகளின் விஷத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பெற்றிருப்பதால், இது கிரேட்டல் பாம்புகள் மற்றும் பிற விஷப் பாம்புகளை வேட்டையாடுகிறது. இந்த பாம்புகள் தங்கள் அளவு மற்றும் வலிமையைப் பயன்படுத்தி மற்ற பாம்புகளை அடக்குகின்றன.
கலிபோர்னியா நில அணில் (California ground squirrels)
கலிபோர்னியா நில அணில்களின் சில இனங்கள், கிரேட்டல் பாம்பு விஷத்திற்கு ஓரளவு எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுள்ளன. இந்த சிறப்பு, மற்ற பாலூட்டிகளுக்கு அபாயகரமான விஷக் கடியிலிருந்து உயிர் பிழைக்க உதவுகிறது. இந்த அணில்கள், பாம்புகளிடம் இருந்து தாக்குதலைத் தவிர்க்க, வால் அசைத்தல், தரையை மிதித்தல் மற்றும் பாம்பின் கவனத்தைத் திசை திருப்புதல் போன்ற புத்திசாலித்தனமான தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
ஓபோசம்கள் (Opossums)
ஓபோசம்கள் அவற்றின் இரத்தத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பெப்டைட் காரணமாக, கிரேட்டல் பாம்பு விஷத்திற்கு இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியுள்ளன. இது, அபாயகரமான விஷக்கடிக்குப் பயப்படாமல் பாம்புகளைத் தாக்கவோ அல்லது இறந்த பாம்பின் உடலை உண்ணவோ அனுமதிக்கிறது.
தேன் கரடி (Honey Badgers)
தேன் கரடிகள் அவற்றின் அச்சமற்ற தன்மைக்கும், விஷத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க மீள்தன்மைக்கும் பெயர் பெற்ற உயிரினம். இவை பெரும்பாலான பாலூட்டிகளுக்கு அபாயகரமான கிரேட்டல் பாம்புகள் மற்றும் பிற விஷப் பாம்புகளின் கடியைத் தாங்கும் திறன் கொண்டவை. தடித்த தோல், விரைவான தாக்குதல்கள் மற்றும் இடைவிடாத உத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி பாம்புகளை வீழ்த்துகின்றன.
கரடிகள் (Badgers)
கரடிகள் அச்சமற்றவை மற்றும் ஆக்ரோஷமானவை. இவற்றின் தடித்த, கடினமான தோல் கிரேட்டல் பாம்பு கடியைத் தாங்க உதவுகிறது. இவை இரவில் வேட்டையாடி, பாம்புகளின் வளைகளுக்குள் தோண்டிச் சென்று நேரடியாக மோதுகின்றன. கிரேட்டல் பாம்புகள் அதிகமாக உள்ள சூழல் அமைப்புகளில், கரடிகள் அவற்றின் இயற்கையான எண்ணிக்கை கட்டுப்படுத்திகளாக செயல்படுகின்றன.
கழுகுகள் (Eagles)
பொன்னிறக் கழுகுகள் மற்றும் பிற பெரிய இறகுள்ள வேட்டையாடிகள் வானத்திலிருந்து விஷப் பாம்புகளை வேட்டையாடப் பரிணமித்துள்ளன. திறந்தவெளியில் படுத்திருக்கும் கிரேட்டல் பாம்புகளை கண்டறிந்து, தனது வலுவான நகங்களைப் பயன்படுத்தி மிகுந்த துல்லியத்துடன் தாக்கி சொல்லும் திறன் கொண்டது கழுகுகள்.
சாலை ஓட்டப்பறவைகள் (Roadrunners)
தென்மேற்கு அமெரிக்காவில் வேகமாக ஓடும் இந்தப் பறவைகள், கிரேட்டல் பாம்புகள் உட்பட சிறிய ஊர்வனவற்றை வேட்டையாடுவதில் திறமையானவை. இவை தங்கள் அபாரமான வேகம் மற்றும் சுறுசுறுப்பைப் பயன்படுத்தி, பாம்பை அசைவற்றுப் போகச் செய்யும்படி மூலோபாய ரீதியாகக் கொத்துகின்றன.
பாப் பூனைகள் (Bobcats)
பாப் பூனைகள் மறைந்திருக்கும், சந்தர்ப்பவாத வேட்டையாடிகள். இவை எப்போதாவது கிரேட்டல் பாம்புகளை வேட்டையாடுகின்றன. கடிக்கப்படாமல் தாக்க, அவை கூர்மையான புலன்கள், உருமறைப்பு மற்றும் மின்னல் வேக அனிச்சைகளைப் பயன்படுத்துகின்றன. பாம்புகள் அவற்றின் முதன்மை உணவு ஆதாரம் இல்லாவிட்டாலும், கிரேட்டல் பாம்புகள் இந்தத் தகவமைக்கக்கூடிய பூனைகளுக்கு புரதம் நிறைந்த உணவை வழங்குகின்றன.
காட்டுப் பன்றிகள் (Wild pigs)
காட்டுப் பன்றிகள் சர்வ உண்ணிகள் மற்றும் அதிக தகவமைத்துக் கொள்பவை. இவை எதிர்கொள்ளும் போது சில சமயங்களில் கிரேட்டல் பாம்புகளை வேட்டையாடுகின்றன. கடினமான தோல் மற்றும் உறுதியான உடலமைப்புடன், காட்டுப் பன்றிகள் தற்காப்புத் தாக்குதல்களைத் தாங்கி, பெரிய காயமின்றி பாம்புகளை உண்ணும் திறன் கொண்டவை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.