முதல்வர் ஸ்டாலின் வந்தால் இங்குதான் தங்குவார் என்று கே.கே. நகர் தனசேகர் வீடு தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணயைத்தில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் வெளியூர் செல்லும்போது தொண்டர்களுக்கு சொந்தமான இடங்களிலேயே அதிகம் தங்கும் வழக்கத்தை கொண்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் என்பவரது சாத்தமங்கலம் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் தங்கியுள்ளார். மேலும் முதல்வர் அங்கு செல்லும்போதெல்லாம் இந்த வீட்டில் தான் தங்குவார் என்றும் தனசேகரன் குறிப்பிட்டுள்ளார். பிகைண்ட் வுட்ஸ் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரன் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த வீடியோவில், கே.கே.நகர் தனசேகரன் கோவிலின் வரலாறு பற்றி கூறுகிறார். இந்த கோவிலில் அனைத்து சாதியினரும் வந்து வழிபடலாம். தமிழகத்தில் சாதி பாகுபாடு அதிகம் இருந்த 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோவில் சாதி பாகுபாடு பார்க்காமல் மக்கள் வழிப்பட்டதாக கூறுகிறார்.
அதன்பிறகு திமுக கரை வேட்டி கட்டாத யாரையும் வீட்டிற்குள் விடுவதில்லை என்றும் இன்றுவரை அதை தொடர்ந்து வருவதாகவும் சொல்லிக்கோண்டே வீட்டிற்குள் நடக்கிறார். இந்த வீடு 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. வீடு முழுவதும் கருப்பு சிகப்பு இல்லாத இடமே இருக்காது. வீட்டில் நாய்களுக்கு என்று தனியாக ஒரு வீடு போன்ற அறையை கட்டியுள்ளனர்.
அனைத்து இடத்திலும் திமுக கொடியான கருப்பு சிகப்பு வண்ணங்களை பதித்துள்ள தனசேகரன், வீட்டில் உள்ள அரிவாள் மனையில் கூட கருப்பு சிகப்பை பயன்படுத்தியுள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இங்கு மூன்றுமுறை வந்து தங்கியுள்ளார். துணை முதல்வராக இருந்தபோது திருவள்ளூவர் சிலை கர்நாடகாவில் திறக்கப்பட்டது. அதன் லைவ் நிகழ்ச்சியை 3 மணி நேரம் இங்யே இருந்து பார்த்தார் என்று கூறியுள்ள அவர், முதல்வர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடு முழுவதும் மாட்டி வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil