தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடிய கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8″ஆம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28″மற்றும் 29″ஆம் தேதி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா – தமிழ்நாடு – ராஜஸ்தான் – கேரளா – குஜராத் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்டன.
இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவை ஆஸ்ரம் பள்ளியில் பயிலும் மாணவர்களான அலிப்ஷா மற்றும் ஜெய்ஸ்னூ ஆகிய இரு மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். குறிப்பாக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இதில் கோவையை சேர்ந்த அலிப்ஷா மற்றும் ஜெய்ஸ்னு ஆகியோர் இடம் பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கோவை திரும்பிய மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் ஆஸ்ரம் பள்ளி தலைவர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி உதயேந்திரன் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil