Advertisment

திருச்சி நட்சத்திர ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் தக்க்ஷின் நக்க்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்டில் பாரம்பரிய ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று துவங்கியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Food Festival

Trichy Food Festival

தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சிக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. திருச்சியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் இலங்கையில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். அது மட்டுமல்லாது வர்த்தக ரீதியாகவும், உறவுகள் ரீதியாகவும் திருச்சிக்கும் இலங்கைக்கும் மிக மிக நெருக்கம் உண்டு.

Advertisment

அந்த வகையில் திருச்சியில் உள்ள இலங்கை மக்களின், தமிழக மக்களின், வெளிநாட்டவரின் "நா" ருசிக்கு திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் தக்க்ஷின் நக்க்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்டில் பாரம்பரிய ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று துவங்கியது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரிய உணவு உள்ளது. அந்த உணவின் வகையில் சிறப்புமிக்க இலங்கையின் யாழ்ப்பாண உணவு என்பது ருசி மிகுந்த உணவாகும். 

publive-image

அப்படி, பாரம்பரிய மிக்க யாழ் உணவு வகைகளை திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் தக்க்ஷின் நக்க்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்டில் ஸ்ரீலங்கன் உணவுத் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று உணவுத் திருவிழா துவங்கியது. யாழ் உணவுத் திருவிழாவை ஹோட்டல் பொது மேலாளர் பிரதீப் கிருஷ்ணா மற்றும் சமையல் கலை நிபுணர் சந்திரகாந்தா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

publive-image

மதியம் மற்றும் இரவு நேர விருந்தாக யாழ் உணவு திருவிழா வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கையிலிருந்து கைதேர்ந்த சமையல் கலை நிபுணர் சந்திரகாந்தா தலைமையில் சர்மலதா மற்றும் ராஜசிவனேசன்,  சீனிவாசன் ஆகியோர் எஸ்.ஆர்.எம் சமையல் கலைஞர்கள் குழுவுடன் இணைந்து குழுவாக இந்த விழாவில் பாரம்பரியமிக்க யாழ் உணவுகளை சமைத்து தருகின்றனர்.

publive-image

இந்த உணவுத் திருவிழாவில் மட்டன், சிக்கன், மீன் என 6அசைவை உணவுகளும் இரண்டு வகையான பிரியாணியும் 16 வகையான சைவ உணவுகளும், இலங்கையின் பாரம்பரியமிக்க மாசி சம்பல் பிரியாணி வகைகள், ஆட்டுக்கால் பாயா, சிலோன் சிக்கன் கறி, கண்டி மட்டன் குருமா, சிலோன் பரோட்டா, நெத்திலி மீன் வருவல், வட்ட லப்பம் தொதல் அல்வா, நவதானிய லட்டு என பாரம்பரியமிக்க யாழ் உணவுகள் அறுசுவையுடன் சமைத்து வழங்கப்படுகிறது.

இந்த யாழ் உணவுத் திருவிழாவில் உணவுக்கு பயன்படுத்தக்கூடிய சமையல் மசாலா பொருட்கள் அனைத்தும் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment