Advertisment

அறப்பளீஸ்வரா் கோயில், சித்தர்கள் வாழ்ந்த குகை: பசுமை கொஞ்சும் கொல்லிமலையில் பார்க்க என்ன இருக்கு?

பசுமை கொஞ்சும் இந்தக் கொல்லிமலையில் அருவிகள், ஆன்மிக தலங்களைத் தாண்டி சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகைத் தோட்டங்கள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolli hills

kolli hills tourist places (Image: Instagram)

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலை மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியண்ண சுவாமி கோயிலுக்கு தவறாமல் சென்று வழிபட்டு வருகின்றனா்.

Advertisment
publive-image

ஆகாய கங்கை அருவி

கொல்லிமலை ஆகாய கங்கை அருவி, இங்கு அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு இந்த அருவி உள்ளது. இங்கு நீங்கள் குளிக்க மலைகளுக்கு நடுவே 1300 படிக்கட்டுகளை இறங்கி செல்ல வேண்டும், நல்ல உடல்நிலை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஏனென்றால் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் இறங்குவதும், ஏறுவதும் கடினம். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு செல்ல கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படுகிறது.

பசுமை கொஞ்சும் இந்தக் கொல்லிமலையில் அருவிகள், ஆன்மிக தலங்களைத் தாண்டி சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகைத் தோட்டங்கள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

கொல்லிமலையில் மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கிறது எட்டுக் கை அம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்குவரும் பக்தர்கள் அதிகம்.

அதேபோல கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசி பாறை மீது அமைந்துள்ளது பெரியண்ண சுவாமி கோயில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கூரைக் கொட்டகையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் நிறைய அருவிகளும், ஆன்மிக தலங்களும் இப்பகுதியில் நிறைந்துள்ளன.

குறிப்பாக குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த கொல்லிமலை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment